பார்சிலோனா,
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் டென்மார்க் வீரரான ஹோல்கர் ருனே, ரஷியாவின் கரண் கச்சனோவ் உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஹோல்கர் ருனே 6-3 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இவர் இறுதிப்போட்டியில் கார்லஸ் அல்காரஸ் அல்லது ஆர்தர் பில்ஸ் உடன் மோதுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :