மும்பை,
1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தியை கட்டாய மூன்றாவது மொழியாக மாற்ற மாநில அரசு முடிவு செய்ததைத் தொடர்ந்து, மராட்டிய மாநிலத்தில் இந்தியை கட்டாயமாக்க தனது கட்சி அனுமதிக்காது என்று சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
சிவசேனாவின் (UBT) தொழிலாளர் பிரிவான பாரதிய காம்கர் சேனாவின் ஒரு நிகழ்வில் உரையாற்றிய தாக்கரே, “இந்தி மொழி மீது தனது கட்சிக்கு எந்த வெறுப்பும் இல்லை, ஆனால் அது ஏன் கட்டாயப்படுத்தப்படுகிறது” என்று கேள்வி எழுப்பினார்.
மாநிலம் முழுவதும் உள்ள மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தியை கட்டாய மூன்றாவது மொழியாக மாற்ற மராட்டிய அரசு எடுத்த முடிவு குறித்து எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், இரண்டு மொழிகளைப் படிக்கும் நடைமுறையிலிருந்து விலகி, அவரது இந்த கருத்துக்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.