சென்னை: முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறை இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மத்தியஅரசின் மக்கள் மருந்தகத்துக்கு போட்டியாக தமிழ்நாடு அரசு முதல்வர் மருந்தகத்தை திறந்துள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்களை 2025 பிப்ரவரி 24ந்தேதி அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மருந்தகங்களில் போதுமான மருந்துகள் கிடைப்பது இல்லை, பெரும்பாலான நோய்களுக்கு தேவையான மருந்துகளும் கிடைப்பது இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதுபோல, முதல்வர் மருந்தகங்களை நடத்தி வரும், […]
