"ஸ்ரீ சிகிச்சையில் இருக்கிறார்; அவரது வீடியோக்களை நீக்குங்கள்" – லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த அறிக்கை

‘வழக்கு எண் 18/9’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘மாநகரம்’ போன்ற திரைப்படங்களின் மூலமாக நமக்குப் பரிச்சயமானவர் நடிகர் ஶ்ரீ.

இவரின் சமூக வலைத்தளப் பக்கத்தின் பதிவுகள்தான் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மிகவும் உடல் மெலிந்த நிலையில் இருக்கும் அவர் தன்னுடைய புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

அவர் தற்போது தன் குடும்பத்தினரிடமிருந்து பிரிந்து வாழ்வதாகவும் கூறப்பட்டது.

இதையறிந்த அவர்களது நண்பர்கள், நடிகர் ஶ்ரீ தங்கியிருக்கும் இடத்தைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்வதாகக் கூறியிருந்தனர்.

நடிகர் ஸ்ரீ

இந்நிலையில் தற்போது நடிகர் ஶ்ரீ மீட்கப்பட்டு, மருத்துவ நிபுணர்கள் சிகிச்சையில் நலம் பெற்று வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும், அவரது தற்போதைய நிலை குறித்த வீடியோக்களையும், வதந்திகளையும் இணையதளங்கள், சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தனர்.

அதுதொடர்பான அறிக்கையைப் பகிர்ந்திருக்கும் ‘மாநகரம்’ படத்தில் நடிகர் ஶ்ரீயை இயக்கிய லோகேஷ் கனகராஜ், “நடிகர் ஸ்ரீக்குத் தற்போது மருத்துவ நிபுணர் சிகிச்சை அளித்து வருகிறார். அவரது மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றி சமூக ஊடகங்களில் இருந்து சிலகாலம் விலகி இருக்கிறார் என்பதை அவரது நலம் விரும்பிகள், நண்பர்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஸ்ரீ குணமடைந்து இயல்பு வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் அவருக்கு இப்போது பிரைவசி தேவைப்படுவதை அனைவரும் மதிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஸ்ரீ-யின் நிலை குறித்த ஊடகங்களின் செய்திகளும், பரவும் தவறான தகவல்களும் மிகவும் வேதனை அளிக்கின்றன. மேலும், ஸ்ரீ-யின் உடல் நிலை குறித்த வதந்திகள், தவறான செய்திகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு இணைய ஊடகங்கள் மற்றும் ஊடகங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

ஸ்ரீ-யின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு, அவர் தொடர்புடைய ஆட்சேபனைக்குரிய வீடியோக்கள் அல்லது நேர்காணல்களை நீக்குமாறும், அவர் குணமடைவதில் கவனம் செலுத்தும் வேளையில் அவரது பிரைவசியை மதிக்குமாறு ஊடகங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

சில நபர்கள் நேர்காணல்களில் வெளிப்படுத்தும் எந்தவொரு கருத்தையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. அதனை முழுமையாக மறுக்கிறோம். இந்தத் தருணத்தில் உங்களது தொடர்ச்சியான அன்பு, ஆதரவு மற்றும் புரிதலுக்கு நன்றி” என்று தெரிவித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Vikatan Whatsapp Channel



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.