Retro: படப்பிடிப்பில் சூர்யாவுக்கு ஏற்பட்ட காயம்; "டூப் வச்சுக்கக் கூடாதா" – நாசர் பகிர்ந்த சம்பவம்

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1ம் தேதி வெளியாகவுள்ளது. சென்னையில் அதற்கான இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

ரெட்ரோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் நாசர் விழாவில் கலந்துகொண்டு பேசினார்.

அவர், “நான் எத்தனையோ திரைப்பட விழாக்களுக்குச் செல்கிறேன். ஆனால் இந்த விழாவை என்னுடைய சொந்த நிகழ்வாக நினைக்கிறேன்.

ரெட்ரோ மேடை

சூர்யாவை அவருடைய முதல் படத்துல இருந்து பார்த்திருக்கேன். முதல்ல கள்ள கபடமற்ற தூய்மையான மனிதர். எடுத்துக்கொண்ட வேலையைச் சிறப்பாகச் செய்வதற்காக எல்லாத்தையும் விட்டுக் கொடுக்குற நடிகர்.

இந்த படத்துல ‘ஏன்டா டூப் வச்சுக்ககூடாதா’னு சூர்யாகிட்ட கோபப்பட்டேன். அவ்வளவு ரிஸ்க் எடுத்தாரு.

தன்னால முடியாதபோது மட்டும்தான் டூப் வச்சிப்பேன்னு சொன்னாரு. இந்த படம் நடக்கும்போது சூர்யாவுக்குத் தலையில அடிபட்டுச்சு.

ஆனால், கொஞ்ச நாள் மட்டுமே ஓய்வு எடுத்துட்டு படப்பிடிப்பு வந்துட்டாரு. சூர்யா, நீ உன் குடும்பத்துக்கு மட்டும் சொந்தம் கிடையாது. நீ நல்லா நடிகன்னு பெயர் எடுத்த போதே எங்களுக்குச் சொந்தமாகிட்ட” எனப் பேசினார் நாசர்.

ரெட்ரோ

“இந்த படத்தில் நல்லா நடிச்சிருக்கேன்னு மத்தவங்க சொன்னத தாண்டி, நான் நல்லா நடிச்சிருக்கேன்னு எனக்கே தோன்றியது.

சந்தோஷ் நாராயணன் இசை எனக்கு ரொம்ப பிடிக்கும். சிறப்பான இசையைக் கொடுத்துள்ளார். இந்த படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றும் கூறினார்.

Retro

2டி எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹஃபீக் முகமது அலி படத்தொகுப்பில் பணியாற்றியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ், சூர்யா இணைவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.