கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள ரெட்ரோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா, பீட்சா, இறைவி படங்களில் நடித்த கருணாகரன் ரெட்ரோ திரைப்படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

23 அரியர் இருந்தும் IPS ஆகணும்னு ஆசை
இசைவெளியீட்டு விழாவில் பேசிய கருணாகரன், “சின்ன வயசுல நான் டெல்லில படிச்சேன். அப்போ ஒரு தமிழ் படம் பார்க்கிறதுக்கு மூணு மாதம் காத்திருக்க வேண்டியதாக இருக்கும். இன்னைக்கு சூர்யா சார் படத்தில நடிக்க வாய்ப்பு கிடைச்சுருக்கு.
‘காக்க காக்க’ படம் காலேஜ் கட் பண்ணிட்டு போய் பார்த்திருக்கோம். எனக்கு 23 அரியர் இருந்தபோதும் அந்த படம் பாத்துட்டு ஐ.பி.எஸ் ஆகணும்னு ஆசை இருந்தது. என்னுடைய நண்பர் ஐபிஎஸ் ஆனதுக்கு சூர்யா சார்தான் இன்ஸ்பிரேஷன்.
“நானும் சந்தோஷும் ஹவுஸ் ஓனர் கிட்ட பொய் சொன்னோம்”
‘ஜிகர்தண்டா’ படத்தில ஆசால்ட் சேது கேரக்டருக்கு ஆள் கிடைக்கலன்னு கார்த்திக் டென்ஷனாக இருந்தாரு. அப்போ நானே போய் ‘ அந்தக் கேரக்டர் நானே பண்றேன்’ னு சொன்னேன். என்கிட்ட கதையா படிச்சிங்களான்னு கேட்டார் கார்த்தி, நான் இல்லைன்னு சொன்னேன்.

இந்த விஷயம் தெரிஞ்சதாலதான் பாபி படத்துல வர்ற சீன்ஸ்ல உண்மையாகவே என்னை அடிக்க ஆரம்பிச்சுட்டாரு. ஏன்டா அசால்ட் சேது கேரக்டர கேக்குறியான்னு…
‘பீட்சா’ படம் முடிஞ்சதும் வாடகைக்கு வீடு எனக்கு சந்தோஷ் நாராயணன் பார்த்துக் கொடுத்தார். பரவால்ல சினிமாகாரங்களுக்கு வீடு கொடுக்கிறாங்களேன்னு சொன்னேன். அப்பதான் சந்தோஷ், “நானே DLF -ல வேலைபாக்குறதா சொல்லிருக்கேன்னு” சொன்னாரு. ஹவுஸ் ஓனர்கிட்ட ஐடி வேலை பார்க்கிறதாக சொல்ல சொன்னாரு.
அப்புறம் நாங்க கொடுத்த இன்டெர்வியூ மூலமாக ஹவுஸ் ஓனருக்கு நாங்க யார்னு தெரிஞ்சுடுச்சு. ஆனா அவருக்கும் படம் பிடிச்சதால விட்டுட்டாரு…” என கலகலப்பாக பேசினார்.