அதிமுகவின் நீட் போராட்டம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சீமான் அளித்த பதில்…
“அதிமுகவின் போராட்டத்திற்கு நான் வேண்டுமானால் ஒரு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன். இந்த மாதிரி பல நாடகங்கள் நடந்திருக்கிறது… நடக்கும். கோயில் திருவிழாவின்போது எப்படி பல நாடகங்கள் நடக்குமோ, அதே மாதிரி தேர்தல் திருவிழாவின் போதும் பல நாடகங்கள் நடக்கும். இது ஒரு கொடுமை தான்.

நான் அந்த மக்களுக்கு ஒரு சத்தியம் செய்தேன். உங்கள் மகன் உயிரோடு இருக்கும்வரை விமான நிலையம் வராது என்று. அங்கே விமான நிலையம் கட்ட முடியாது… கட்ட விடமாட்டேன்.
சென்னை விமான நிலையத்தில் இண்டிகோவை தவிர பறக்க எதாவது விமானம் இருக்கிறதா? அது அங்கு வந்து விமானத்தை ஓட்டும் முதலாளிக்கானது.
பறக்கறதை பற்றியே கவலைப்படுகிறீர்களே… பசியோடு வாடும் ஆயிரக்கணக்கான மக்கள் பற்றிக் கவலைப்படுவதில்லை.
பறந்து எங்கு செல்லப்போகிறீர்கள்? தமிழ்நாட்டில்… இந்தியாவில் இண்டிகோ என்ற ஒரே ஒரு விமானம் நிறுவனம் தான் உள்ளது.
இங்கிருந்து மதுரை செல்ல ரூ.24,000. திரும்ப வருவதற்கு ரூ.24,000. கிட்டதட்ட ரூ.50,000. இண்டிகோ வைப்பது தான் கட்டணம். அவர்கள் விமானம் எடுக்கும் நேரம் தான் நேரம்.
அரசிடம் சொந்த விமான நிறுவனம் இல்லாதபோது, எதற்கு விமான நிலையம்… அதனால், விமான நிலைய திட்டத்தைக் கைவிடவேண்டும்” என்று பேசியுள்ளார்