மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தகுதி சுற்று: சிறந்த அணியை தேர்வு செய்த ஐ.சி.சி.

துபாய்,

ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வருகிற செப்டம்பர் 29-ந் தேதி முதல் அக்டோபர் 26-ந் தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய 6 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மீதமுள்ள 2 அணிகள் தகுதி சுற்று அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டன.

இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெற்றன. இதில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து, அயர்லாந்து மற்றும் தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.

இதன் முடிவில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த தகுதி சுற்று நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில் இந்த தகுதி சுற்றில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய வீராங்கனைகளை தேர்வு செய்து சிறந்த அணியை ஐ.சி.சி. உருவாக்கியுள்ளது. இந்த அணிக்கு பாகிஸ்தான் வீராங்கனை பாத்திமா சனா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.சி.சி. தேர்வு செய்த அணி விவரம் பின்வருமாறு:-

ஹேலி மேத்யூஸ் (வெஸ்ட் இண்டீஸ்)

முனீபா அலி (பாகிஸ்தான்)

ஷர்மின் அக்தர் (வங்காளதேசம்)

கேத்ரின் பிரைஸ் (ஸ்காட்லாந்து)

நிகர் சுல்தானா (வங்காளதேசம்) (விக்கெட் கீப்பர்)

பாத்திமா சனா (பாகிஸ்தான்) (கேப்டன்)

சினெல்லே ஹென்றி (வெஸ்ட் இண்டீஸ்)

ஆலியா அலீன் (மேற்கிந்திய தீவுகள்)

கேத்ரின் ப்ரேசர் (ஸ்காட்லாந்து)

நஷ்ரா சந்து (பாகிஸ்தான்)

சாடியா இக்பால் (பாகிஸ்தான்)

ரிசர்வ் வீராங்கனை

ரபேயா கான் (வங்காளதேசம்)

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.