மராத்தியர்கள் மற்றும் மகாராஷ்டிரா மாநில நலனுக்காக ஒரே கட்சியாக செயல்பட வேண்டும் என்ற ராஜ் தாக்கரே பேசியுள்ளதற்கு சுப்ரியா சுலே வரவேற்பு தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவுக்காக உத்தவ் தாக்கரேவும் ராஜ் தாக்கரேவும் ஒன்றுபட்டால், அதை நாங்கள் முழு மனதுடன் வரவேற்போம் என்று தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே கூறியுள்ளார். ‘மகாராஷ்டிரா எல்லாவற்றிற்கும் மேலானது’ என்று சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (MNS) தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் தனித்தனியாக கூறியது […]
