‘விடுதலை – 1 & 2’, ‘கருடன்’, ‘மாமன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து சூரி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘மண்டாடி’. ‘செல்ஃபி’ படத்தை இயக்கிய மதிமாறன் புகழேந்தி இப்படத்தை இயக்குகிறார்.

சத்யராஜ், தெலுங்கு நடிகர் சுகாஸ், மகிமா நம்பியார், சாச்சனா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஜி.வி. பிரகாஷ் பேசுகையில், “இந்தப் படத்தின் ஐடியாவைக் கேட்கும்போதே ரொம்ப புதுசாக இருந்தது.
இயக்குநர் மதிமாறன் எனக்கு வெற்றிமாறன் மூலமாகத்தான் பழக்கம். ‘ஆடுகளம்’ படத்திலிருந்து எனக்கு மதிமாறனைத் தெரியும்.
இந்தப் படத்திற்கு நான் கடைசியாகத்தான் வந்தேன். ‘குட் பேட் அக்லி’ படத்தை நான் 30 நாட்களில் முடித்தேன்.
அதே மாதிரி இந்தப் படத்தையும் 10 நாட்களில் முடிக்கச் சொன்னார்கள். வெற்றிமாறனோடு கிட்டத்தட்ட 20 வருடங்களாகப் பயணிக்கிறேன்.

நானும் அவரும் ஒன்றாகவே வளர்ந்திருக்கிறோம். சூரி சாரோடு மியூசிக்கிற்காக இணைந்து அதிகமாக வேலை செய்யவில்லை.
அவர் ஹீரோவான பிறகு ‘கருடன்’, ‘மாமன்’ படங்களுக்கு நான்தான் இசையமைக்க வேண்டியது. ஆனால் அது மிஸ் ஆகிவிட்டது.
இப்போது ‘மண்டாடி’ படத்துக்கு நான் இசையமைக்கிறேன். அவர் முதலில் இசையைப் பற்றி தான் கேட்கிறார்.
எனக்கு ரொம்ப பிரஷராக இருக்கிறது. அவர் வரும்போதெல்லாம் பார்த்து மியூசிக் பண்ண வேண்டியதாக இருக்கிறது (சிரிக்கிறார்). இந்த ‘மண்டாடி’ குறிப்பிடத்தக்க ஒரு படமாக இருக்கும்” என்று உற்சாகத்துடன் பேசினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…