நடிகர் சூரி தற்போது ‘மண்டாடி’ என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இப்படத்தை வெற்றிமாறனின் உதவியாளர் மதிமாறன் என்பவர் இயக்குகிறார்.
மஹிமா நம்பியார், சத்யராஜ், அச்சுயுத் குமார் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் அறிமுக விழா நேற்று (ஏப்ரல் 21) மாலை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய மஹிமா நம்பியார், “தமிழில் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு உங்களைச் சந்திக்கிறேன்.
மதிமாறன் சாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். நிறையப் பேரிடம் கதை சொன்னேன். ஆனால் நீங்கள் மட்டும்தான் நடிக்க ஓகே சொன்னீர்கள் என்றார்.
நான் இந்தப் படத்தில் நடிப்பதை ஒரு சேலன்ஞ் ஆகத்தான் நினைக்கிறேன். கதை சொன்ன உடனேயே நான் ஓகே சொல்லிவிட்டேன்.
மலையாளத்தில் அதிக கவனம் செலுத்தி நடிக்க ஆரம்பித்து விட்டேன். அதனால் தமிழில் ஒன்றரை வருடங்களாக நடிக்கவில்லை.

திரும்பத் தமிழில் நடிக்க ஆரபிக்கும்போது ஒரு நல்ல கதையில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். சூரி சார் உங்கள் வேலையை எப்போதும் நான் பின்பற்றுவேன்.
உங்களின் சினிமா பயணம் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன்தான். உங்களுடன் பணியாற்ற இருப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த வாய்ப்பைக் கொடுத்ததற்கு நன்றி” என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…