இந்தியாவில் உள்நாட்டுப் போர் ஏற்பட உச்ச நீதிமன்றம்தான் காரணமாக அமையும் என்று பேசிய பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடர உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 10 மசோதாக்களுக்கும் அனுமதி அளித்ததுடன், மசோதாக்களுக்கு அனுமதி அளிக்க காலக்கெடு நிர்ணயித்தது. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தாலும் கூட அந்த மசோதாக்கள் மீது 3 மாதத்தில் முடிவெடுக்க […]
