ஜெய்ப்பூர்,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சேலஞர்ஸ் பெங்களூரு – ராஜஸ்தான் ராயல்ஸ் இடையிலான ஆட்டம் வருகிற 24-ம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியிலிருந்து வயிற்று பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் விலகியுள்ளார்.
இதற்கான காரணம் என்னவெனில், சாம்சன் டெல்லிக்கு எதிரான போட்டியின்போது வயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டு பாதியில் வெளியேறினார். இதனையடுத்து லக்னோவுக்கு எதிரான கடந்த போட்டியை தவறவிட்டார். இதனால் ரியான் பராக் கேப்டனாக செயல்பட்டார்.
இந்த சூழலில் தற்போது காயத்திலிருந்து மெல்ல மெல்ல குணமடைந்து வரும் அவர் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்திலிருந்தும் விலகியுள்ளார். எனவே ரியான் பராக் கேப்டனாக தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.