ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்ததா சென்னை? தோனி சொன்ன முக்கிய தகவல்!

Mumbai Indians vs Chennai Super Kings: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள வான்கடே  மைதானத்தில் நடைபெற்றது. இந்த சீசன் தொடக்கத்தில் சென்னையில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியது. அதற்கு மும்பை பழி தீர்க்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிறப்பாக விளையாடி 9 வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த சீசனில் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று 6 பொட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளனர்.

மேலும் படிங்க: மேக்ஸ்வெல் மற்றும் லிவிங்ஸ்டோன் விடுமுறைக்காக வந்துள்ளனர்.. கடுமையாக சாடிய சேவாக்!

பிளே ஆப் வாய்ப்பு?

கிட்டத்தட்ட 6 போட்டிகளில் தோல்வியடைந்துள்ள நிலையில், 99 சதவீதம் பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ள சென்னை அணிக்கு கேப்டன் தோனி சில உத்வேகமான பதில்களை அளித்துள்ளார். அடுத்த சீசனுக்கான அணியை தயார் செய்வதில் கவனமாக இருக்கிறோம் என்று மும்பை அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு தோனி தெரிவித்துள்ளார். மிடில் ஓவர்களில் மோசமான பேட்டிங் காரணமாக இந்த போட்டியில் தோல்வி அடைந்துள்ளோம். இன்னும் சீக்கிரம் அடித்து ஆடி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. பவர் பிளேயில் நல்ல ஒரு தொடக்கம் இருந்த போதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் 176 ரன்கள் மட்டுமே அடித்தது. நல்ல ஒரு பேட்டிங் பிச்சில் 25 முதல் 30 ரன்கள் அடிக்க தவறியது. குறிப்பாக மிடில் ஓவர்களில் சிவம் துபே மற்றும் ஜடேஜா மிகவும் மெதுவாக விளையாடியதால் 25 முதல் 30 ரன்கள் குறைந்தது. கிட்டத்தட்ட 16 வது ஓவரிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் ரன்களை அடிக்க தொடங்கினார். ஆனால் அதற்குள் மும்பை இந்தியன்ஸ் பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி அதிக அழுத்தத்தை ஏற்படுத்தினர்.

போட்டி முடிந்த பின்பு பேசிய தோனி

எங்களால் எதிர்பார்த்த டார்கெட்டை வைக்க முடியவில்லை. மைதானத்தில் டியூ வரும் என்று எங்களுக்கு தெரியும், ஆனாலும் மிடில் ஓவர்களில் ரன்களை அடிக்க தவறினோம். பும்ரா மிகவும் சிறப்பாக பந்து வீசினார். அவர் உலகில் நம்பர் ஒன் பவுலர் என்று அனைவருக்கும் தெரியும். கடைசி நேரத்தில் அடிக்க முடிந்ததை முன்பே அடித்திருக்க வேண்டும். இன்னும் சிறிது ரன்கள் அடித்திருக்க வேண்டும். அதுவும் டியூ வரும் ஒரு மைதானத்தில் 176 நிச்சயம் பத்தாது. ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் இவ்வளவு வெற்றிகரமாக இருப்பதற்கு இதுவரை நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடியிருந்தோம். இந்த முறை நல்ல கிரிக்கெட் விளையாடவில்லை என்பதற்காக அதிகம் எமோஷனலாக கூடாது.

2020 ஆம் ஆண்டும் எங்களுக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. ஆனால் அடுத்த ஆண்டு கோப்பையை வென்றோம். இந்த சீசனில் மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் நாங்கள் வெற்றி பெற்று ஆக வேண்டும்.  அதற்கான முயற்சிகளில் நிச்சயம் இறங்குவோம். ஆனால் தோல்வியுற்றால் அடுத்த ஆண்டிற்காக தயாராவோம். எங்கள் அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் நாங்கள் வாய்ப்பு வழங்கவில்லை. இனி அதை செய்வோம், அடுத்த ஆண்டிற்கான சிறந்த பிளேயிங் 11ஐ இந்த ஆண்டே நிச்சயம் உருவாக்குவோம். சென்னை அணி மீண்டும் அதே பலத்துடன் திரும்பும்” என்று தோனி நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

மேலும் படிங்க: பஞ்சாபுக்கு பதிலடி.. ஆர்சிபிக்கு வெற்றியை பெற்று தந்த கோலி, படிக்கல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.