நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. விளையாடிய 8 போட்டிகளில் 6 போட்டிகளில் தோல்வி அடைந்து 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த பின்னர் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. இதனால் ராஜஸ்தான் அணி ஃபார்மிற்கு திரும்பியதாக தெரிந்தது. ஆனால் அடுத்த 4 போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்து ஏமாற்றத்தை தந்தது. குறிப்பாக அந்த அணி விளையாடிய கடைசி இரண்டு போட்டியில் வெற்றி பெறும் தருணத்திற்கு சொன்று கடைசி நேரத்தில் சொதப்பி தோல்வியை தழுவியது. இதன் காரணமாக ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் வாய்ப்பையும் தவறவிட்டுள்ளது.
இச்சூழலில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது. இந்த நிலையில், இப்போட்டியில் இருந்து சஞ்சு சாம்சன் விலகி உள்ளார். சஞ்சு சாம்சன் குணமடைந்து வருகிறார். அணியின் மருத்துவ ஊழியர்களுடன் ஜெய்ப்பூரிலேயே இருப்பார். அவரது தற்போதைய நிலைப்படி, ஆர்சிபி அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் அவர் விளையாட மாட்டார். அவர் மீண்டும் அணிக்கு திரும்புவது குறித்து ஆட்டத்திற்கு ஆட்டம் அணுகுமுறையை எடுக்கும் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சஞ்சு சாம்சன் கடைசியாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக விளையாடினார். அப்போட்டியில் ராஜஸ்தான் அணி இரண்டாவதாக பேட்டிங் செய்தது. அப்போது தொடக்க வீரராக களம் இறங்கிய சஞ்சு சாம்சனுக்கு விளையாடி கொண்டிருக்கும்போது திடீரென காயம் ஏற்பட்டது. உடனே டக் அவுட்டுக்கு திரும்பினார். அதையடுத்து அவர் லக்னோ அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் விளையாடவில்லை. இந்த நிலையில், அவர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிங்க: சிஎஸ்கே நல்ல வீரர்களை வாங்கவில்லை.. ரூ. 120 கோடியை வீணடித்துவிட்டது – புலம்பும் சுரேஷ் ரெய்னா!
மேலும் படிங்க: முன்பெல்லாம் சிஎஸ்கே பேட்டிங் என்றால் ஒரு பயம் இருக்கும்.. ஆனால்! அம்பத்தி ராயுடு ஆதங்கம்!