Chennai Super Kings (CSK): ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் ஒரு அணியாக உள்ளது. இதுவரை ஐந்து முறை கோப்பையை வென்று பலமான அணி என நிரூபித்துள்ளது. மேலும் ஒரு சில சீசன்களை தவிர மற்ற அனைத்து சீசன்களிலும் பிளே ஆப்பிற்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு தோனி தனது கேப்டன்சியை ருதுராஜிடம் ஒப்படைத்தார். ஆனால் கடந்த ஆண்டு பிளே ஆப்பிற்கு செல்ல சென்னை அணி தவறியது. இந்த ஆண்டும் அதே நிலை நீடித்து வருகிறது. இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 6ல் தோல்வி அடைந்துள்ளதால் பிளே ஆப் கனவு கிட்டத்தட்ட பறி போகி உள்ளது.
இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆப் செல்ல தவறினால் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பிளே ஆப்பிற்கு செல்லாமல் இருப்பது இதுவே முதல் முறையாக அமையும். ஐபிஎல் 2025ல் ஒவ்வொரு அணியிலும் பல சீனியர் வீரர்களை விட இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் எப்போது அனுபவம் உள்ள வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கும். ஆனால் இந்த ஆண்டு பல இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு அளித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு சீனியர் வீரர்களை வைத்து மட்டுமே கோப்பையை வென்ற அணி, இந்த ஆண்டு தங்களது பணியை மாற்றி உள்ளனர். சென்னை அணியில் விளையாடிய இளம் வீரர்களை பற்றி பார்ப்போம்.
மேலும் படிங்க: RCB vs RR: சஞ்சு சாம்சன் விலகல்.. என்ன காரணம்?
ஆயுஷ் மத்ரே – 17 வயது
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக மும்பையை சேர்ந்த 17 வயதாகும் ஆயுஷ் மத்ரே சென்னை அணியில் இணைந்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடி முதல் போட்டியிலேயே தனது திறனை வெளிப்படுத்தினார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் இவருக்கு சென்னை அணி வாய்ப்பு கொடுத்துள்ளது. இவர் தொடர்ந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அபினவ் முகுந்த் – 18 வயது
சென்னை அணியில் மிகவும் குறைந்த வயதில் அறிமுகமான வீரர் என்ற பெருமையை ஆயுஷ் மத்ரே பெற்றுள்ளார். ஆனால் கடந்த 2008 ஆம் ஆண்டே சென்னை அணி இதனை செய்துள்ளது. 18 வயதான அபினவ் முகுந்திற்கு ஐபிஎல் 2008 ஆம் ஆண்டு சென்னை அணி வாய்ப்பு கொடுத்துள்ளது. அந்த சமயத்தில் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த அபினவ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். குறைந்த போட்டியில் விளையாடியிருந்தாலும் 18 வயதில் சென்னை அணியில் விளையாடி உள்ளார்.
அங்கித் ராஜ்பூட் – 19 வயது
வேகப்பந்து வீச்சாளரான அங்கித் ராஜ்பூட் 2013 ஆம் ஆண்டு சென்னை அணியில் விளையாடி உள்ளார். 19 வயது ஆன இவரை சென்னை அணி நம்பி அணியில் எடுத்தது. அதன் பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகளுக்கும் இவர் விளையாடி உள்ளார்.
மதிஷா பத்திரனா – 19 வயது
இலங்கையை சேர்ந்த மதிஷா பத்திரனாவை 2022 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் அறிமுகப்படுத்தியது சென்னை சூப்பர் கிங்ஸ். தேசிய அணியில் கூட இடம்பெறாத இவரை சில உள்ளூர் தொடர்களில் பார்த்து 19 வயதிலேயே ஐபிஎல்க்கு கொண்டு வந்தனர். கிட்டத்தட்ட மலிங்காவை போலவே பவுலிங் ஆக்சன் கொண்ட இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ஆக உள்ளார். மேலும் தோனிக்கு பிடித்த ஒரு வீரராகவும் இருந்து வருகிறார்.
நூர் அகமது – 20 வயது
ஆப்கானிஸ்தானை சேர்ந்த இளம் சுழற் பந்துவீச்சாளர் நூர் அகமதை சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்தாண்டு ஏலத்தில் எடுத்தது. 20 வயதே ஆகும் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முதல் சீசனிலேயே சிறப்பாக பந்து வீசி வருகிறார். இவரது மிஸ்டரி பவுலிங் எதிரணிக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. மேலும் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலிலும் நூர் அகமது இடம் பிடித்துள்ளார்.
மேலும் படிங்க: சிஎஸ்கே நல்ல வீரர்களை வாங்கவில்லை.. ரூ. 120 கோடியை வீணடித்துவிட்டது – புலம்பும் சுரேஷ் ரெய்னா!