சவுதி அரேபியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜெட்டா நகரில் பிரதமர் வந்து இறங்கியதும் அங்கு கூடியிருந்த இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் ‘ மோடி, மோடி’ என கோஷம் போட்டனர். அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தபடி பிரதமர் சென்றார். அவரை வரவேற்கும் விதமாக கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. மேலும், 21 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
சவுதி அரேபியாவில் 27 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.கடந்த பத்தாண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியாவுக்கு செல்வது இது மூன்றாவது முறையாகும். இருப்பினும், ஜெட்டா நகரத்துக்கு செல்வது இதுவே முதல் முறை. 2023 ஆம் ஆண்டு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அரசுமுறை பயணமாக இந்தியா வந்ததைத் தொடர்ந்து பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.