நம்மில் பலருக்கு தனியாக பேசிக்கொள்ளும் பழக்கம் இருக்கும். ஒரு நாளில் என்னென்னவெல்லாம் நடந்தது என்று இரவில் தூங்கும் போது அதனை சிந்தித்துப் பார்ப்போம். பின்னர் அது குறித்து ஆழ்ந்த யோசித்து தங்களிடம் பேசிக்கொள்வார்கள். இதையே பழக்கமாகவும் வைத்துக் கொள்வார்கள்.
பொது இடங்களில், வீடுகளில், பாத்ரூம்களில், கண்ணாடி முன்பு என தங்களிடம் அல்லது மனசாட்சியிடம் பேசுவதாக உரையாடிக் கொள்வார்கள்.
இப்படி தனியாக பேசுவது இயல்பானதா அல்லது மனநோயின் அறிகுறியா? என்று கேள்வி எழுந்திருக்கும்.
இது குறித்து உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த் விகடனுக்கு பகிர்ந்துள்ளார்.

Dr. chitra aravind
உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த் கூற்றுப்படி, ஒருவர் தனியாக பேசிக்கொண்டாலே மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கூறி விட முடியாது.
சுய மதிப்பீடு செய்வதற்காக ஒருவர் தனியாக பேசிக் கொள்கிறார் என்றால் அது தவறில்லை, தங்களின் அன்றைய நாள் குறித்து புரிந்து கொள்ளவும், தனிப்பட்ட நபரின் மதிப்பு குறித்து தெரிந்து கொள்வதற்கு இவ்வாறு செய்வதால் பாதிப்பு இல்லை.
மாறாக இதனையே பழக்கமாக வைத்துக் கொண்டு, அது அந்த தனிப்பட்ட நபரின் வாழ்க்கையையும் வேலையையும் பாதிக்கிறது என்றால் மன ஆலோசகரை அணுக வேண்டும்.
தனியாக பேசுவதுடன் சில அறிகுறிகள் தெரிந்தால், அதாவது தனியாக சிரித்தல் அல்லது அவர்களின் வழக்கமான நடைமுறைகளில் மாற்றம் தெரிந்தால், மருத்துவரை அணுக வேண்டும்.

சிலர் ஒரு நாளில் நடந்த சம்பவத்தை சமாளிப்பதற்காக மீண்டும் அதே போன்று நடப்பதாக எண்ணி அந்த விஷயத்தை அவர்கள் சமாளிப்பது போல் எண்ணிக் கொள்கிறார்கள். அப்படி செய்வது மனநோயின் அறிகுறியாகும்.
தனியாக பேசிக் கொள்ளும் பழக்கம் தங்களின் மதிப்பீட்டை அறிவதோடு இருந்தால் அது மற்றவர்களை பாதிக்காது. இதே பழக்கத்தை தொடர்ந்தால் குடும்பத்தினர்களிடமும் வேலை செய்யும் இடத்தில் உள்ளவர்களிடமும் ஒருவித பாதிப்பை ஏற்படுத்தும்.
மற்றவர்கள் இந்த பழக்கமுடையவரை மனநோயால் பாதிக்கப்பட்டவர்களாக பார்ப்பார்கள். எனவே சாதாரணமாக ஒருவர் தனியாக பேசிக் கொள்கிறார் என்றால் அது தவறில்லை… மாறாக இதே பழக்கத்தை ஒரு நாள் முழுவதும் வைத்துக் கொண்டால் அது வேறு அறிகுறியில் சுட்டிக்காட்டுவதாக கூறுகிறார் சித்ரா அரவிந்த்.