டிவிஎஸ் மோட்டாரின் அதிக மைலேஜ் வழங்குகின்ற குறைந்த விலை மோட்டார்க்கிளான ஸ்போர்ட் 110 2025 ஆம் ஆண்டிற்கான மாடல் புதுப்பிக்கப்பட்ட பாடி கிரிபிக்ஸூடன், நிறங்கள் மற்றும் OBD-2B ஆதரவு பெற்ற எஞ்சின் என பல்வேறு வசதிகளை கொண்டிருக்கலாம்.
ஸ்போர்ட் 110 பைக்கில் தொடர்ந்து 109.7 சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் ஸ்போர்ட்டின் பவர் அதிகபட்சமாக 8.17bhp மற்றும் 8.7Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
மிக சிறப்பான மைலேஜ் வழங்குகின்ற ஸ்போர்ட்டிற்கு போட்டியாக ஹீரோ HF டீலக்ஸ், ஹோண்டா ஷைன் 100 உள்ளிட்ட மாடல்கள் சந்தையில் கிடைக்கின்றது.
புதிய ஸ்போர்டில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் 5 ஸ்டெப் அட்ஜெஸ்டெட் ஸ்பிரிங் ஷாக் அப்சார்பருடன் இரு பக்க டயர்களிலும் டிரம் பிரேக்குடன் முன்புறத்தில் 130 மிமீ மற்றும் பின்புறத்தில் 110மிமீ வழங்கப்பட்டு சிபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களில் வரவுள்ள 2025 டிவிஎஸ் ஸ்போர்ட் 110 பைக்கின் விலை ரூ.70,000 முதல் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.