MI: மும்பை இந்தியன்ஸ் கனவை தகர்த்த கேகேஆர் அணி! இனி சிரமம் தான்!

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டர்ன் மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கேப்டன் சுப்மான் கில் சிறப்பாக விளையாடி 90 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. கொல்கத்தா அணி 6 புள்ளிகள் உடன் 7வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தோல்வியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் டாப் ஆர்டர் கனவு தற்போது குறைந்துள்ளது.

மேலும் படிங்க: சிஎஸ்கே நல்ல வீரர்களை வாங்கவில்லை.. ரூ. 120 கோடியை வீணடித்துவிட்டது – புலம்பும் சுரேஷ் ரெய்னா!

குஜராத் டைட்டன்ஸ் சிறப்பான பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது, அதுவே அவர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக அமைந்தது. குஜராத் டைட்டன்ஸ் அணியில் வழக்கம் போல சாய் சுதர்சன் மற்றும் கேப்டன் சுப்மான் கில் சிறப்பான ஆட்டத்தை கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 114 ரன்கள் இந்த ஜோடி சேர்த்தது. சாய் சுதர்சன் 52 ரன்களும், கில் 90 ரன்களும் அடித்தனர். அடுத்து களமிறங்கிய ஜாஸ் பட்லர் 41 ரன்கள் அடிக்க குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 198 ரன்கள் அடித்தது. கொல்கத்தா அணி தரப்பில் பைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா மற்றும் ரஸ்ஸல் தலா ஒரு விக்கெட்களை எடுத்தனர்.

சேஸிங்கில் தோல்வியடைந்த கொல்கத்தா

பிட்ச் கொஞ்சம் மெதுவாக இருப்பதை உணர்ந்த குஜராத் டைட்டன்ஸ் அணியின் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்கள் யாரையும் செட்டிலாக விடவில்லை, அடுத்தடுத்து முக்கியமான கட்டத்தில் விக்கெட்களை எடுத்து இந்த போட்டியில் வெற்றியை உறுதி செய்தனர். கேப்டன் ரஹானே மட்டும் 36 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். மற்ற எந்த ஒரு பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாடவில்லை. இறுதியில் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. குஜராத் அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் ரசித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

பறி போன மும்பையின் கனவு

இதுவரை 8 போட்டிகளில் விளையாடி அதில் 6 வெற்றி பெற்று 12 புள்ளிகள் உடன் குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மறுபுறம் மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகளில் 4ல் வெற்றி, 4ல் தோல்வி அடைந்து 8 புள்ளிகள் உடன் 6வது இடத்தில் உள்ளது. இன்று நடைபெறும் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி 12 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தை பிடிக்கும். ஒருவேளை கொல்கத்தா அணி நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் புதன்கிழமை நடைபெறும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி பெரும் லட்சத்தில் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருந்திருக்கலாம். ஆனால் கேகேஆர் தோல்வியுற்றுதால் புதன்கிழமை ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றாலும் மூன்றாவது இடத்தை மட்டும் தான் பிடிக்க முடியும்.

மேலும் படிங்க: முன்பெல்லாம் சிஎஸ்கே பேட்டிங் என்றால் ஒரு பயம் இருக்கும்.. ஆனால்! அம்பத்தி ராயுடு ஆதங்கம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.