ஆடம்பர டொயோட்டா கேம்ரி செடானின் விலை உயர்ந்தது.! | Automobile Tamilan

ரூ.50,000 வரை கேம்ரி ஹைபிரிட் செடானின் விலையை டொயோட்டா உயர்த்தியுள்ளதால் 2025 மாடல் விலை ரூ.48.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக அமைந்துள்ள நிலையில், கூடுதலாக ரூ.15,000 கட்டணத்தில் பிளாட்டினம் வெள்ளை பேரல் நிறம் கிடைக்கின்றது.


இந்தியாவில் ஒற்றை Elegant வேரியண்டடை பெற்றுள்ள கேம்ரி ஹைபிரிடில்  2.5 லிட்டர் நான்கு சிலிண்டர் என்ஜின் இரண்டு மின்சார மோட்டார் பெற்று முன்பக்க வீல் டிரைவ் மாடல் 225hp மற்றும்  220 Nm வழங்குகின்றது. இந்த செடானில் eCVT கியர்பாக்ஸ் உடன் Eco, Sport, மற்றும் Normal என மூன்று டிரைவிங் மோடுகளை கொண்டதாக வந்துள்ளது. மேலும் மைலேஜ் லிட்டருக்கு 25.49 கிமீ என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் ஒன்பது ஏர்பேக்குகள் மற்றும் 360-டிகிரி கேமரா அமைப்பு, லெவல் 2 ADAS (Toyota’s Safety Sense 3.0 suite) அம்சங்களை கொண்டுள்ளது.

12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை பெற்ற ஆடம்பரமான செடானில் மற்ற வசதிகளாக ஒன்பது ஸ்பீக்கர் JBL ஆடியோ அமைப்பு, மூன்று-மண்டல தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, ஹெட்-அப் டிஸ்ப்ளே, எலக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் ஓட்டுநர் மற்றும் பயணிகள் இருவருக்கும் 10-வழி பவர்-அட்ஜஸ்டபிள் முன் இருக்கைகள் மற்றும் பல ஆகியவற்றுடன் பலவேறு அம்சங்கள் உள்ளது.

  • Camry Hybrid Elegant – ரூ.48.50 லட்சம்
  • Camry Hybrid Elegant (platinum white pearl) – ரூ.48.65 லட்சம்

(எக்ஸ்-ஷோரூம்)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.