இஸ்லாம்பாத் காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. நேற்று ஜம்மு-காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் மொத்தம் 26 பேர் உயிரிழந்துள்ளனர். தாக்குதல் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா மற்றும் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். நேற்றைய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா (LcT) இன் […]
