தொடர்ந்து சொதப்பும் ஹைதராபாத்.. பாயிண்ட்ஸ் டேபிளில் டாப்பிற்கு சென்ற மும்பை!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 41வது போட்டி இன்று (ஏப்ரல் 23) ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சை தேர்வு செய்தார். 

அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களம் இறங்கினார். ஆனால் இவர்களால் நல்ல தொடக்கத்தை கொடுக்க முடியவில்லை. கடந்த சீசனில் இந்த இருவரும் கலக்கிய நிலையில், இந்த ஆண்டு மிக மோசமாக அமைந்துள்ளது. டிராவிஸ் ஹெட் டக் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து அபிஷேக் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து இஷான் கிஷான் 1 ரன்னில் வெளியேறினார். இவரது பேட்டில் பந்து படாதல் நிலையில், அவர் வெளியேறினார். தீபக் சஹார் வீசிய பந்து வொயிடாக சென்றது. அதனை விக்கெட் கீப்பர் ரிக்கில்டன் பிடித்தார். ஆனால் பேட்டில் பட்டதாக நினைத்து இஷான் கிஷான் வெளியேற அம்பேரும் அவுட் கொடுத்துவிட்டார். பின்னர்  நிதிஷ் ரெட்டி 2 ரன்னில் ஆட்டமிழக்க, கிளாசென் மற்றும் அபினவ் மனோகர் அணிக்கு ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய இவர்கள் 99 ரன்கள் சேர்த்தனர். 

க்ளாசென் 71 ரன்களும் அபினவ் மனோகர் 43 ரன்களையும் சேர்த்தார். இறுதியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 143 ரன்கள் அடித்தது. மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக டிரண்ட் போல்ட் 4 விக்கெட்களை கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களம் இறங்கியது. 

தொடக்க வீரராக ரிக்கில்டன் மற்றும் ரோகித் சர்மா விளையாடிய நிலையில், ரிக்கில்சன் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அதையடுத்து வில் ஜாக்ஸ் 22 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 70 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி போட்டியை முடித்து வைத்தார். அவர் 19 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார். இதனால் மும்பை அணி 15.4 ஓவர்கள் முடிவில் 146 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 

மேலும் படிங்க: CSK: கம்பேக் கொடுக்கும் ருதுராஜ்? வெளியான முக்கிய அப்டேட்!

மேலும் படிங்க: ஐபிஎல்லால் அடித்த ஜாக்பாட்.. இந்த 5 வீரர்களுக்கு தேடி வந்த வாய்ப்பு!

 

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.