பஹல்காம் தாக்குதலுக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் கண்டனம்

கோவை: “காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்புப் படைகள், அவர்களின் கடமைகளைச் செய்ய அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். பயங்கரவாதத்தின் நோக்கம் போர் அல்ல” என்று ஈஷா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்புப் படைகள், அவர்களின் கடமைகளைச் செய்ய அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். பயங்கரவாதத்தின் நோக்கம் போர் அல்ல. ஆனால், ஒரு சமூகத்தை அச்சத்தால் முடக்குவது. பீதியைப் பரப்புவதும், சமூகத்தைப் பிளவுபடுத்துவதும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தடம் புரளச் செய்வதும், ஒவ்வொரு மட்டத்திலும் சட்டமின்மையை உருவாக்குவதும் தான் அதன் நோக்கமாகும்.

நம் தேசத்தின் இறையாண்மையை பாதுகாக்கவும், வளர்க்கவும் விரும்பினால், பயங்கரவாதத்தை இரும்புக் கரத்துடன், உறுதியான நீண்டகால தீர்மானத்துடனும் கையாள வேண்டும். கல்வி, பொருளாதாரம், சமூக நலன் என அனைத்து மட்டங்களிலும் அனைவருக்கும் சம பங்கீடு வழங்குவது நீண்ட கால தீர்வை கொடுக்கும். ஆனால், இப்போதைக்கு, மதம், சாதி, அல்லது அரசியல் தொடர்புகள் ஆகியவற்றின் அனைத்து குறுகிய பிளவுகளுக்கும் அப்பால் ஒரு தேசமாக ஒன்றாக நிற்பதும், நமது பாதுகாப்புப் படைகளுக்கு அவர்களின் கடமைகளைச் செய்ய அனைத்து மட்டங்களிலும் ஆதரவளிப்பதும் மிகவும் முக்கியமானது. இங்கு தாக்குதலில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்த அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்.” என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.