காஷ்மீர் பள்ளத்தாக்கில் சுற்றுலா சீசன் உச்சத்தை எட்டிய நிலையில் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் காட்டுமிராண்டித்தனமாக கொல்லப்பட்டதை அடுத்து அம்மாநிலத்தின் சுற்றுலாத் துறை ஒரேநாளில் சீர்குலைந்துள்ளது. இந்த ஆண்டு சுற்றுலா சீசன் தொடங்கியதில் இருந்து களைகட்டிய சுற்றுலா பயணிகளின் வருகை துலிப் தோட்டம் திறந்த 26 நாட்களில் 8.5 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குளிர்காலத்தை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக வரும் ஆகஸ்ட் மாதம் வரை […]
