புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் 1960-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை புதன்கிழமை அன்று ரத்து செய்துள்ளது இந்தியா. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே பாராட்டி உள்ளார்.
“நோபல் பரிசு பெறுவதற்காக 1960-ல் பாம்புக்கு நீர் கொடுத்தார் நேரு. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் ஹீரோ அவர். பல்வேறு ஆறுகளின் நீரை அவர் பாகிஸ்தானுக்கு வழங்கினார்.
பிரதமர் மோடி, இன்று அவர்களுக்கான நீர் மற்றும் உணவை நிறுத்தி உள்ளார். பாகிஸ்தானியர்கள் நீரின்றி செத்து மடிவார்கள். இது 56 இன்ச் மார்பு. நாங்கள் பாஜக தொண்டர்கள். அவர்களை சித்திரவதை செய்து கொல்வோம்” என எக்ஸ் பக்கத்தில் நிஷிகாந்த் துபே கூறியுள்ளார்.
பாஜக உறுப்பினர்கள் ‘56 இன்ச் மார்பு’ என பிரதமர் மோடியை குறிப்பிடுவார்கள். மோடி தலைமையிலான அரசின் வலிமையை உருவகம் செய்யும் வகையில் அவர்கள் இதை சொல்வது வழக்கம்.
சிந்து நதி அமைப்பில் ஆறு முக்கிய நதிகள் உள்ளன. சிந்து, ஜீலம், செனாப், ரவி, பியாஸ் மற்றும் சட்லஜ் இதில் இடம்பெற்றுள்ளது.