ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு

பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி வெளியூரில் நடந்த 5 ஆட்டங்களில் வெற்றியையும், சொந்த மைதானத்தில் நடந்த 3 ஆட்டங்களில் தோல்வியையும் சந்தித்து புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் அணி இந்த சீசனில் வெகுவாக தடுமாறுகிறது. 8 ஆட்டங்களில் ஆடியுள்ள அந்த அணி 2 வெற்றி, 6 தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ‘பிளே-ஆப்’ சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும் என்பதால் ராஜஸ்தானுக்கு இது வாழ்வா-சாவா? ஆட்டமாக அமைந்துள்ளது.

உள்ளூரில் முதல் வெற்றியை பதிவு செய்ய பெங்களூரு அணி முழு பலத்தையும் வெளிப்படுத்தும். அதே நேரத்தில் பெங்களூருவுக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட ராஜஸ்தான் அணி அதற்கு பதிலடி கொடுக்க தீவிரமாக முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.