சச்சின் டெண்டுல்கர் மகன் எடுக்க போகும் அதிரடி முடிவு – யுவராஜ் சிங் தந்தை சொன்ன‌ முக்கிய தகவல்

Arjun Tendulkar : இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தனது மகன் அர்ஜூன் டெண்டுல்கரை எப்படியாவது இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வைத்துவிட வேண்டும் என்ற பெருங்கனவோடு இருக்கிறார். அதற்காக, மகன் அர்ஜூன் டெண்டுல்கர் பவுலராக விருபம்பியதை தொடர்ந்து உலகம் முழுவதும் பவுலிங்கில் ஆளுமை செலுத்திய நட்சத்திர பவுலர்களான வார்னே, மெக்ராத், பொல்லாக், வாசிம் அக்ரம் உள்ளிட்ட பலரிடம் பயிற்சி எடுக்க வைத்தார் சச்சின் டெண்டுல்கர். இதனால் இடது கை வேகப்பந்துவீச்சாளராகவும் உருவெடுத்தார். ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியால் தொடர்ச்சியாக ஏலம் எடுக்கப்பட்டு, இந்த ஐபிஎல் தொடரிலும் அந்த அணியிலேயே இருக்கிறார். ஆனால் அவருக்கு பிளேயிங் லெவனில் விளையாட வாய்ப்பு கொடுப்பதில்லை. 

அர்ஜூன் டெண்டுல்கர் தொடர்ச்சியாக விளையாடாமல் அல்லது புறக்கணிக்கப்படுவதை சச்சின் விரும்பவில்லை. இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா மீது கடும் கோபத்தில் கூட இருந்தார் சச்சின். இந்தியா வெற்றி பெற்றாலும், மும்பை இந்தியன்ஸ் சிறப்பாக ஆடினாலும், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பாராட்டும் சச்சின் அன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடும் பிளேயர்களின் எக்ஸ் கணக்கையும் டேக் செய்து பாராட்டு தெரிவிப்பார். ஆனால், ரோகித் சர்மா சிறப்பாக விளையாடினாலோ, உலகக்கோப்பை வென்றாலோ கேப்டன் என்ற முறையில் கூட ரோகித் சர்மாவுக்கு வாழ்த்து தெரிவிக்கமாட்டார் சச்சின்.

இப்படியான சூழலில் பவுலராக இருப்பதில் இருந்து தன்னை பேட்டிங் ஆல்ரவுண்டராக மாற்ற இப்போது திட்டமிட்டுள்ளார் அர்ஜூன் டெண்டுல்கர். உள்ளூர் போட்டிகளில் பேட்டிங் ஆடிய அனுபவம் இருப்பதால் இனிமேல் பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார் அவர். இந்த சூழலில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் யுவ்ராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் அர்ஜூன் டெண்டுல்கர் மட்டும் யுவ்ராஜ் சிங்கிடம் பேட்டிங் பயிற்சி எடுத்தால் நிச்சயம் அபிஷேக் சர்மாவைப் போல் வளர்ந்துவிடுவார் என கூறியுள்ளார். 

யோகராஜ் சிங் பேசும்போது, அர்ஜூன் டெண்டுல்கர் பேட்டிங்கில் இனி கவனம் செலுத்துவதே நல்லது. அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஆனால், அர்ஜூன் என்  மகன் யுவ்ராஜ் சிங்கிடம் கிரிக்கெட் பயிற்சிபெற வேண்டும். அப்போது அவருக்கு சிக்சர் அடிக்கக்கூடிய வல்லமை படைத்தவராக மாறுவார். இப்போது இடது கை வேகப்பந்துவீச்சாளராக இருக்கும் அர்ஜூன் டெண்டுல்கர் பேட்ஸ்மேனாகவும் மாறும்போது, அவருக்கான வாய்ப்புகள் என்பது பிரகாசமாக மாறும். கிரிக்கெட் வாழ்க்கையும் சீக்கிரம் உயரும் என தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.