மே 8 ஆம் தேதி 2025 கியா கேரன்ஸ் மற்றும் கேரன்ஸ் EV அறிமுகமாகிறது | Automobile Tamilan

இந்திய சந்தையில் கியா கேரன்ஸ் எம்பிவி ஃபேஸ்லிஃப்ட் மாடலுடன் கூடுதலாக எலக்ட்ரிக் வெர்ஷன் கேரன்ஸ் என இரண்டும் மே 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் விற்பனைக்கு உடனடியாக கிடைக்க துவங்கலாம்.


புதிய மாடலில் டிசைன் மாற்றங்களுடன், சஸ்பென்ஷன் சார்ந்த மாற்றங்கள் கூடுதல் வசதிகளை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் எஞ்சின் சார்ந்த அம்சங்களில் எந்த மாற்றமும் இருக்காது.

2025 கியா கேரன்ஸ்

கேரன்ஸ் காரில் தொடர்ந்து 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷன் பெற்றிருக்கும். டிசைன் மாற்றங்களில் குறிப்பாக முன்பக்க கிரில் உட்பட ஹெட்லைட், டிஆர்எல் போன்றவற்றில் மாறுபட்டதாகவும், பக்கவாட்டில் பெரிய மாற்றங்கள் இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட டிசைன் கொண்ட அலாய் வீல் கொண்டிருக்கும்.

பின்புறத்தில் புதுப்பிக்கப்பட்ட டெயில் விளக்குடன் மிக நேர்த்தியான பம்பர் மாற்றங்களை கொண்டிருக்கலாம். இன்டீரியர் அம்சங்களில் சமீபத்தில் வந்த சிரோஸ் காரில் இடம்பெற்றிருப்பதை போன்ற மிகப்பெரிய கிளஸ்ட்டருடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெறக்கூடும்.

பாதுகாப்பு அம்சத்தை பொறுத்தவரை, 6 ஏர்பேக்குகளுடன் அடிப்படையான ஏபிஎஸ் உடன் இபிடி, இஎஸ்பி, ஹீல் ஹோல்டு வசதி ஆகியவற்றுடன் டாப் வேரியண்டில் லெவல் 2 ADAS பெறக்கூடும்.

மேலும், தற்பொழுது விற்பனையில் உள்ள மாடலும் சந்தையில் கிடைத்தாலும், கூடுதலாக புதிய கேரன்ஸ் மாடலும் விற்பனைக்கு கிடைக்கலாம் என கூறப்படுகின்றது. எனவே, கேரன்ஸ் 2025 விலை ரூ.11 லட்சத்துக்கும் கூடுதலாக துவங்கலாம்.

கியா கேரன்ஸ் இவி

மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற கேரன்ஸ் இவி காரில் அனேகமாக 42 kWh பேட்டரி மாடல் 99 kW (135 PS) மற்றும்  வெளிப்படுத்துகின்ற நிலையில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 350-400கிமீ ரேஞ்ச் தரவல்லதாகும். அடுத்து, 51.4 kWh பேட்டரி 126 kW (171 PS) பவர் வெளிப்படுத்துவதுடன் முழுமையான சார்ஜில் 450-500கிமீ வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.