மதுரவாயல் முதல் திருப்பெரும்புதூர் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ரூ. 1,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர்எ.வ.வேலு தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய, பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, நசரத்பேட்டை முதல் திருமழிசை நெடுஞ்சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்ட அரசு ஆவண செய்யுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, “பூந்தமல்லி தொகுதி நசரத்பேட்டை முதல் திருமழிசை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்டுவதற்கு சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அதற்கு […]
