அதிர்ஷ்டமும் ஐஸ்வர்யமும் அள்ளித் தரும் சொர்ணாகர்ஷண பைரவர்-பைரவி திருக்கல்யாணம்; கலந்து கொள்ளுங்கள்!

அதிர்ஷ்டமும் ஐஸ்வர்யமும் அள்ளித் தரும் சொர்ணாகர்ஷண பைரவர்-பைரவி திருக்கல்யாணம். கலந்து கொள்ளுங்கள். 30-4-2025 புதன்கிழமை அட்சய திருதியை: சக்தி விகடனும் புதுச்சேரி ஞானமேடு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயமும் இணைந்து நடத்தவுள்ளது.

சங்கல்ப விவரங்களுக்கு: 044-6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

சொர்ண பைரவர்

பைரவரை வழிபடுவது கலியுகத்தில் உள்ள சகல ஆன்மாக்களின் கஷ்டங்களை நீக்கி சகல சௌபாக்கியங்களையும் பெற உதவும் ஒரு வழிபாட்டு முறையாக நம்பப்படுகிறது.

மேலும் சிவன் ஆலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் கடைசி வழிபாடு பைரவருக்குத்தான்.

சிவாலயத்தின் காவல் தெய்வமாக விளங்கும் பைரவர், பயத்தை நீக்குபவர், பாவத்தை நீக்குபவர் என்று பொருள்.

மரண பயமூட்டும் யமனின் அதிகாரத்தைக் குறைத்து தம்மைச் சரண் அடையும் பக்தர்களுக்கு அபயம் அளித்து நீண்ட ஆயுள் வழங்கும் தெய்வமும் இவரே.

பைரவத் திருவடிவங்களில் மங்கலகரமானவர், ஐஸ்வர்யங்களை அருளுபவர் என்றால் அது சொர்ணாகர்ஷண பைரவர் என்கிறது புராணம்.

ராகு – கேதுவை முப்புரி நூலாக அணிந்து இருக்கும் சொர்ணாகர்ஷண பைரவர் அதிர்ஷ்ட தெய்வமாகப் போற்றப்படுகிறார்.

அதோடு வெற்றியின் தேவியான பைரவி சக்தியின் அம்சமாக அருள்கிறாள். அதிர்ஷ்டத்தையும் ஐஸ்வர்யத்தையும் அள்ளித் தரும் அட்சய திருதியை நாளில் ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவருக்கும் ஸ்ரீபைரவிக்கும் திருமணம் செய்து வைத்து வேண்டிக்கொண்டால் அவரது வாழ்வில் பொன்னும் பொருளும் சேரும்.

ஆயுளும் வெற்றியும் கூடும். ஆரோக்கியமும் அதிகாரமும் பெருகும்.

சொர்ணாகர்ஷண பைரவர்

பெரும் பொருள் செலவில் நடத்தப்படும் இந்த சொர்ணாகர்ஷண பைரவர் – பைரவி திருமண வைபவத்தை உங்கள் சக்தி விகடனும் புதுச்சேரி ஞானமேடு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயமும் இணைந்து நடத்தவுள்ளது.

மேலும் திருமண வாழ்வு சிறக்கவும் குடும்ப உறவுகள் மேம்படவும் சொர்ணாகர்ஷண பைரவர் – பைரவி திருமணம் உதவும்.

இந்த அபூர்வமான நிகழ்வில் கலந்து கொண்டு சங்கல்பித்துக் கொண்டால் திருமண வரத்தை அருளும்.

திருமணமானவர்களுக்குப் பிள்ளை வரம் அளிக்கவும் உதவும். கடன் பிரச்னைகள், கண் திருஷ்டி பிரச்னைகள் யாவும் இந்த சங்கல்ப நிகழ்வால் நீங்கும் என்பது நம்பிக்கை.

சொர்ணாகர்ஷண பைரவர்- பைரவி திருக்கல்யாணம்

பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் வழியில் இடையர்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே ஞானமேடு பகுதியில் அமைந்திருக்கிறது ஸ்ரீபைரவி சமேத ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம்.

இங்குதான் ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர், பைரவியோடு அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார்.

தங்கக் கை திருவண்ணாமலை மகான் சேஷாத்திரி சுவாமிகள் தவமிருந்த புண்ணிய பூமியான இங்கு முத்து குருக்கள், சேஷாத்திரி சுவாமிகளின் உத்தரவுப்படி இங்கு இந்த ஆலயத்தைக் கட்டி விழாக்கள் எடுத்து வருகிறார்.

வரும் அட்சய திருதியை நாளில் அன்பர்கள் செல்வவளம் பெருகவும் தரித்திரம் ஒழியவும் 30-4-2025 அன்று சிறப்பான சொர்ணாகர்ஷண பைரவர்-பைரவி கல்யாண வைபவம் நடைபெற உள்ளன, வாசகர்கள் இதில் கலந்து கொண்டு சங்கல்பம் செய்து கொண்டால் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சங்கல்ப விவரங்களுக்கு: 044-6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் அட்சய திருதியை நாளில் (30-4-2025) இந்த வைபோகத்தில் கலந்து கொண்டால் தரித்திரமும் நீங்கி, ஆயுளும் ஐஸ்வர்யமும் கூடும்.

குறிப்பாக பொன் பொருள் சேரும். விரும்பிய வேலை, தொழிலில் முன்னேற்றம், வியாபாரத்தில் விருத்தி, பங்கு வர்த்தகத்தில் லாபம், வெளிநாட்டு வாய்ப்புகள் போன்றவை கிட்டவும் இந்த வழிபாடு நிச்சயம் உதவும்.

குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஆகர்ஷண குங்குமம், விசேஷ ரட்சை, அட்சதை அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

சங்கல்ப விவரங்களுக்கு: 044-6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

பதிவு செய்ய இந்த QR – கோடை பயன்படுத்திக் கொள்ளவும்.

qr code for bairavar bairavi worship

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.