அப்பா எங்கே என்ற என் குழந்தையின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை என பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் கணவனை இழந்த பெண் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிடன் அதிகாரி, மனைவி மற்றும் மூன்றரை வயது மகனுடன் அமெரிக்காவின் புளோரிடாவில் வசித்து வருகிறார். கடந்த 8-ம் தேதி சொந்த ஊருக்கு வந்த அவர்கள், காஷ்மீருக்கு சுற்றுலா சென்றனர். இந்நிலையில்தான், பஹல்காமிலம் நடந்த தீவிரவாத தாக்குதலில் பிடன் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து அவருடைய மனைவி கூறும்போது, “தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகளின் ஊர் பற்றி கேட்டார்கள். பின்னர் ஆண்களை தனியாக நிற்க வைத்து அவர்களின் மதம் பற்றி கேட்டார்கள். அதன் பிறகு ஒவ்வொருவராக துப்பாக்கியால் சுட்டனர். என் குழந்தையின் கண் முன்னே என் கணவரை சுட்டுக் கொன்றனர். இப்போது, அப்பா எங்கே என என் மகன் அடிக்கடி கேட்கிறான். அப்பா இனி வரமாட்டார் என அவனிடம் எப்படி சொல்வது என்றே தெரியவில்லை” என மனம் உடைந்த நிலையில் தெரிவித்தார்.