கனக மஹாலக்ஷ்மி திருக்கோயில், புருஜுப்பேட். விசாகப்பட்டினம். ஆந்திர பிரதேசம். தல சிறப்பு : இங்குள்ள மகாலெட்சுமி வலது கையில் தாமரையுடன், இடது கை முழங்கை வரை மட்டுமே உள்ள நிலையில் அருள்பாலிப்பதும், பக்தர்கள் தாங்களே அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்து கொள்வதும் இத்தலத்தின் சிறப்பு. புருஜு என்றாள், அரசர்களின் கோட்டையில் வெளிப்பகுதி! விசாகப்பட்டினத்து அரசர்களின் குலதெய்வமாக கோட்டையின் காவல் தெய்வமாக, விளங்கியிருக்கிறாள் இந்த வீரலெக்ஷ்மி! கோபுரம், விமானம் என்று தனிப்பட்ட கோயிலுக்கு உரிய வெளி அமைப்புகள் ஏதும் இல்லை. சாலையின் நடுவில் […]
