ஹீரோ நிறுவனம் ஸ்கூட்டர் சந்தையில் டெஸ்டினி 125 மற்றும் ஜூம் 125 என இரண்டு புதிய 125சிசி மாடல்களை சமீபத்தில் கொண்டு வந்துள்ள நிலையில், முதலில் டெஸ்டினி 125 மாடல் லிட்டருக்கு 59 கிமீ மைலேஜ் தரும் என இந்நிறுவனம் சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் உண்மையாக எவ்வளவு மைலேஜ் கிடைக்கின்றது என்பதனை அறிந்து கொள்ளலாம்.
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 59 கிமீ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள டெஸ்டினி 125 உண்மையில் ஓட்டும் பொழுது சீரான வேகம் மற்றும் அதிகப்படியான பிரேக்கிங் இல்லாத நெடுஞ்சாலை பயணத்தின் பொழுது லிட்டருக்கு 52 கிமீ வரை கிடைக்கின்றது.
மிகவும் போக்குவரத்து நெரிசல், சிட்டி பயன்பாட்டில் அதிகப்படியான பிரேக் உள்ளிட்ட காரணத்தால் லிட்டருக்கு 46 கிமீ வரை கிடைக்கின்றது.
மைலேஜ் சோதனை அதிகப்படியான வேகம் இல்லாமல் சீரான வேகம், முறையான டயர் பிரெஷர், ஓட்டுநரின் அனுபவம் உள்ளிட்டவை கொண்டே கிடைக்கின்றது.
சிறப்பான மைலேஜ் பெற முக்கியமாக கவனிக்க வேண்டியவை..!
- டயர் பிரெஷர் சரியாக OEM பரிந்துரைத்தபடி உள்ளதா என வாரம் இருமுறை சோதனை செய்து கொள்ள வேண்டும்.
- அதிகப்படியான வேகத்தை விரைவாக அதிகரிப்பதனை தவிர்க்கவும், சீரான வேகத்தில் வாகனத்தை இயக்க வேண்டும்.
- முறையான பராமரிப்பு அவசியமாகிறது.