ஹீரோ 2025 டெஸ்டினி பிரைம் ஸ்கூட்டரில் OBD-2B வெளியானது | Automobile Tamilan

இந்தியாவின் குறைந்த விலை 125சிசி ஸ்கூட்டர் மாடலாக விளங்குகின்ற டெஸ்டினி பிரைம் மாடலில் புதிய மாசு விதிகளுக்கு உட்பட்ட OBD-2B மேம்பாட்டினை பெற்று ரூ.2,700 வரை விலை உயர்த்தப்பட்டு ரூ.81,448 எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகியுள்ளது.


புதிய டெஸ்டினி பிரைமில் தொடர்ந்து OBD-2B ஆதரவுடன்  9 hp பவரினை 7000 rpm-ல் மற்றும் 10.4 Nm டார்க்கினை 5500 rpm-ல் வழங்குகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

தொடர்ந்து இருபக்க டயரிலும் டிரம் பிரேக் இடம்பெற்று 90/90-10 ட்யூப்லெஸ் டயர் இரு பக்கத்திலும் வழங்கப்பட்டு டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ஒற்றை ஸ்பிரிங் காயில் சஸ்பென்ஷனுடன் விளங்குகின்றது.

மற்றபடி, நிறங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் வெள்ளை, சிவப்பு, நீலம், மற்றும் கருப்பு என 4 நிறங்களுடன் அனலாக் கிளஸ்ட்டரை பெற்றதாக விளங்குகின்றது.

  • DESTINI PRIME ₹ 78,448
  • DESTINI PRIME OBD2B ₹ 81,148

(எக்ஸ்-ஷோரூம்)

Related Motor News

No Content Available

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.