ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 160cc சந்தையில் கிடைக்கின்ற எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி மற்றும் எக்ஸ்ட்ரீம் 160ஆர் என இரண்டு பைக்கிலும் OBD-2B மேம்பாட்டை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மற்றபடி, எவ்விதமான வசதிகள், நிறங்களல் எந்த மாற்றமும் இல்லை.
4 வால்வுகளை பெற்ற பெர்ஃபாமென்ஸ் ரக எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக்கில் 163.2cc ஏர்-ஆயில் கூல்டூ என்ஜின் அதிகபட்சமாக 8500rpm-ல் 16.9 hp பவர் மற்றும் 6500rpm-ல் 14.5 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
இரண்டு வால்வுகளை பெற்ற எக்ஸ்ட்ரீம் 160R 2V மாடலில் 163.2cc ஏர்-ஆயில் கூல்டூ என்ஜின் அதிகபட்சமாக 8500rpm-ல் 15hp பவர் மற்றும் 6500rpm-ல் 14 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
இரு மாடல்களிலும் பொதுவாக பல்வேறு டிசைன் அம்சங்களை பகிர்ந்து கொண்டாலும் எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி மாடல் ஸ்பிளிட் சீட், சிங்கிள் சீட் ஆப்ஷனுடன் பல்வேறு நிறங்களை பெற்றுள்ளது.
- XTREME 160R Split 4V DISC – ₹ 1,37,000
- XTREME 160R 4V DISC – ₹ 1,39,000
- XTREME 160R Split 4V DISC OBD-2B – ₹ 1,38,600
- XTREME 160R 4V SINGLE DISC OBD2B – ₹ 1,40,600
- XTREME 160R 2V SINGLE DISC – ₹ 1,11,611
- XTREME 160R 2V SINGLE DISC OBD2B – ₹ 1,13,211
(எக்ஸ்-ஷோரூம்)