Kavya Maran Reaction : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்து நடப்பு ஐபிஎல் 2025 தொடரில் பிளே ஆப் வாய்ப்பை நேரடியாக இழந்த முதல் அணியாக மாறியது. இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு மிகப்பெரிய கவலையாக இருந்தாலும் சன்ரைசர்ஸ் அணி ரசிகர்களுக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளது. ஏனென்றால் அந்த அணி இப்போட்டியில் தோற்றிருந்தால் கூட பிளே ஆப் வாய்ப்பை இழந்திருக்கும்.
அதனால் இன்னும் அந்த வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டிருக்கும் மகிழ்ச்சி சன்ரைசர்ஸ் ரசிகர்களுக்கு உள்ளது. இந்தநேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது சன்ரைசர்ஸ் ஓனர் காவ்யா மாறன் கொடுத்த ஒவ்வொரு ரியாக்ஷனும் வைரலாகியுள்ளது. சன்ரைசர்ஸ் அணி பீல்டிங் செய்தபோது ஜடேஜா கொடுத்த ஒரு கேட்சை ஹர்ஷல் படேல் கோட்டைவிட்டார். மிக எளிதான கேட்ச் தான் அது. அதை அவர் பிடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோட்டைவிட்டார். காவ்யா மாறன், எப்படியும் ஹர்ஷல் படேல் பிடித்துவிடுவார் என சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவர் விட்டதும், கோபம், ஏமாற்றம், விரக்தி என எல்லாவற்றையும் சில மைக்ரோ நொடிகளில் முகத்தில் காட்டிவிட்டார்.
அந்த ரியாக்ஷனே வைரலாகிக் கொண்டிருந்த நேரத்தில் சன்ரைசர்ஸ் அணி பேட்டிங் செய்தபோது கொடுத்த இன்னொரு ரியாக்ஷ்ன் தான் அல்டிமேட். சன்ரைசர்ஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு அருகில் இருந்த நேரம் அது. அப்போது, சிஎஸ்கே பிளேயர் அடுத்தடுத்து இரண்டு நோபால்களை வீசி ப்ரீஹிட் கொடுத்தார். ஆனால் இந்த இரண்டு வாய்ப்புகளையும் கமிந்து அடிக்காமல் மிஸ் செய்துவிட்டார். கமிந்து பந்தை மிஸ் செய்ததும் கேலரியில் அமர்ந்து மேட்சை பார்த்துக் கொண்டிருந்த காவ்யா மாறன், ஒரு அகோரமான ரியாக்ஷனை கொடுத்து தன்னுடைய அதிருப்தியை வெளிக்காட்டினார்.
காவ்யா மாறன் ரியாக்ஷன்ஸ்
April 25, 2025
April 25, 2025
இப்போது அந்த ரியாக்ஷனும் இணையத்தில் வைரலாகியுள்ளது. இப்போட்டியின் முடிவில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் இருந்து 8வது இடத்துக்கு முன்னேறியது. இனி விளையாடும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு அந்த அணி தகுதி பெற முடியும்.
மேலும் படிங்க: அந்த நான்கு பேர் தான் காரணம்! தோல்வி குறித்து தோனி சொன்ன முக்கிய வார்த்தைகள்!
மேலும் படிங்க: ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்னதாக இந்த 5 வீரர்களை வெளியேற்றும் சிஎஸ்கே!