ஐபிஎல் தொடரின் 44வது போட்டி இன்று (ஏப்ரல் 26) கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களான பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியானஸ் ஆர்யா களம் இறங்கினர்.
இருவரும் அதிரடியாக விளையாடினர். இவர்களின் விக்கெட்டை கொல்கத்தா அணியால் வீழ்த்த முடியவில்லை. 120 ரன்கள் சேர்த்த பின்னரே பிரியான்ஸ் ஆர்யா ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய அவர் 69 ரன்கள் சேர்த்த நிலையில், ரசல் பந்து வீச்சில் வைபவ் அரோராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து மறுபக்கம் விளையாடிய பிரப்சிம்ரன் கிங்ஸ் 49 பந்துகளில் 83 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.
20 ஓவர்கள் முடிவில் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 25 ரன்களுடனும் ஜோஸ் இங்கிலிஸ் 11 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா அணி சார்பில் வைபவ் அரோரா அதிகபட்சமாக 2 விக்கெட்களை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது.
தொடக்க வீரர்களாக சுனில் நரைன் மற்றும் குர்பாஸ் களம் இறங்கிய நிலையில், ஒரு ஓவர் மட்டுமே வீசப்பட்டது. அதையடுத்து மழை குறுக்கிட்டதால் போட்டியானது நிறுத்தப்பட்டது. கொல்கத்தா அணி 7 ரன்கள் எடுத்திருந்தது. மழை நின்றுவிடும் சிறிது நேரத்தில் போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 11 மணி அளவில் போட்டியை ரத்து செய்ததாக அறிவித்தனர். இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இதனால் பஞ்சாப் அணி 11 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. கொல்கத்தா அணி 7 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.
மேலும் படிங்க: ஐபிஎல் கோப்பையை வெல்லப்போகும் அணி இதுதான்.. அடித்து சொல்லும் யுவராஜ் சிங்!
மேலும் படிங்க: சிஎஸ்கே அணிக்கு எதிர்கால நட்சத்திரம் கிடைத்துவிட்டார் – அனில் கும்ப்ளே