Vivo X200 Series இன் இரண்டு ஸ்மார்ட்போன்களான Vivo X200 மற்றும் Vivo X200 Pro ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனைக்கு இருக்கும் நிலையில், தற்போது இந்தத் தொடரில் மேலும் இரண்டு போன்களை அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, நிறுவனம் இந்தத் சீரிஸ் இல் விவோ எக்ஸ்200 ப்ரோ மினி மற்றும் விவோ எக்ஸ்200 அல்ட்ரா மாடலை அறிமுகப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், சமீபத்திய அறிக்கையின்படி, விவோ X200 ப்ரோ மினிக்கு பதிலாக X200 FE ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. வாருங்கள், இதன் முழு விரிவாத்தை இங்கே காணலாம்.
விவோ X200 FE இந்தியாவில் அறிமுகம் | Vivo X200 FE India Launch:
Smartprix வெளியிட்ட அறிக்கையின்படி, விவோ X200 FE (Vivo X200 FE) ஸ்மார்ட்போன் வரும் ஜூன் 2025 இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். இதனுடன், நிறுவனம் நாட்டில் விவோ X200 அல்ட்ராவையும் அறிமுகப்படுத்தும்.
இந்த அம்சங்களை ஸ்மார்ட்போனில் காணலாம்:
சமீபத்தில் வெளியான சில அறிக்கைகளின் படி, FE மாடலில் Dimensity 9400e SoC உடன் வருகிறது என்றும் இது Dimensity 9400 செயலியின் இலகுரக பதிப்பாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த தொலைபேசியில் 6.31 அங்குல 1.5k LTPO OLED திரை இடம்பெறலாம். இதன் புதுப்பிப்பு வீதம் 120Hz ஆகும். புகைப்படம் எடுப்பதற்கு, 50MP பிரதான கேமரா மற்றும் 50MP டெலிஃபோட்டோ லென்ஸை தொலைபேசியின் பின்புற கேமராவில் காணலாம். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 50MP கேமராவை இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இது தவிர, தொலைபேசியில் 90W வேகமான சார்ஜிங் ஆதரவை வழங்கப்படலாம். இந்த தொலைபேசியை சீனாவில் விவோ எஸ் 30 ப்ரோ மினியின் வேறுபட்ட மாறுபாடாக அறிமுகப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இதுவரை இந்த ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் குறித்து நிறுவனம் எவ்வித அதிகாரப்பூர்வ தகவலையும் வழங்கவில்லை.
ஸ்மார்ட்போனின் விலையைப் பற்றி பேசுகையில், இந்தத் சீரிஸில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, இதன் விலை விவோ எக்ஸ்200 மற்றும் விவோ எக்ஸ்200 ப்ரோவை விடக் குறைவாக இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் சரியான விவரக்குறிப்புகள் மற்றும் விலை அறிமுகத்தின் போது மட்டுமே தெரிய வரும். கூடிய விரைவில் நிறுவனம் இதி தொடர்பான தகவலை வெளியாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.