சஞ்சீவ் கொயங்கா நீங்கள் நினைப்பது போல் கிடையாது – நிக்கோலஸ் பூரன் ஆதரவு!

ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முடிவில் லக்னோ அணி மோசமாக விளையாடும் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் முடிக்கும் என கூறப்பட்ட நிலையில், அந்த அணி 9 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் இருந்து வருகிறது. பிளே ஆஃப் போட்டியில் அந்த அணியும் உள்ளது. 

அதேபோல் லக்னோ அணி தோல்வி அடையும் போதெல்லாம் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. அவர் வீரர்களை சுகந்திரமாக விடுவதில்லை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. இந்த குற்றச்சாட்டுகள் கடந்த ஐபிஎல் தொடரில் இருந்தே வைக்கப்பட்டு வருகின்றன. அந்த அணியில் இருந்த கே.எல்.ராகுலும் சஞ்சீவ் கொயங்கா உடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகவே வெளியேறினார். 

இந்த நிலையில், லக்னோ அணியின் அதிரடி வீரராக திகழும் நிகோலஸ் பூரன் சஞ்சீவ் கொயங்காவுக்கு ஆதரவாக பேசி உள்ளார். அவர் பேசுகையில், தனது அணிக்கு ஆதரவளிப்பதில் சஞ்சீவ் கொயங்கா முன்னிலையில் இருப்பார். அவர் ஒருபோதும் கிரிக்கெட் தொடர்பான முடிவுகளில் தலையிடுவதில்லை. இதுவரை அதனை நன்றாகவே உணர்ந்துள்ளேன். அதேபோல் லக்னோ அணியால் வாங்கப்பட்ட எந்த ஒரு வீரருக்கும் போதுமான வாய்ப்புகளை வழங்க தவறியதில்லை. அவர் அனைத்து வகையிலும் ஆதரவாக இருப்பார். அது எங்கள் அணியிலும் நல்ல தாக்கத்தை கொடுத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் குறித்து நிகோலஸ் பூரன் கூறுகையில், என் வாழ்க்கையில் ஒரு கொடூர விபத்தை நான் சந்தித்துள்ளேன். ரிஷப் பண்ட்டும் அப்படியான ஒரு விபத்தை சந்தித்து அதில் இருந்து மீண்டு வந்துள்ளார். தொடக்க காலம் முதலே எனக்கும் ரிஷப் பண்டுக்கும் நல்ல நட்பு உள்ளது. பல விஷயங்கள் குறித்து ஆலோசித்துள்ளோம். அவர் எப்போது வெஸ்ட் இண்டீஸ் வந்தாலும் உடனே சந்திப்போம். அதேபோல் நான் இந்தியா வந்தாலும் உடனே ரிஷப் பண்ட் சந்திப்பார். 

எங்களின் வாழ்க்கையில் நடந்த விபத்து மிகவும் மோசமானது. அதில் இருந்து மீண்டு இருவரும் தற்போது கிரிக்கெட் விளையாடி வருகிறோம். எங்களின் அனுபவங்களை கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்கின்றோம் என கூறினார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இன்று (ஏப்ரல் 27) மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மும்பை அணிக்கு எதிராக அதிக வெற்றியை வைத்துள்ளது லக்னோ அணி. இருப்பினும் தற்போது மும்பை அணி உள்ள ஃபார்மிற்கு லக்னோ அணி வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.   

மேலும் படிங்க: தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் விளையாடுவாரா? சுரேஷ் ரெய்னா விளக்கம்

மேலும் படிங்க: ஐபிஎல் கோப்பையை வெல்லப்போகும் அணி இதுதான்.. அடித்து சொல்லும் யுவராஜ் சிங்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.