தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் விளையாடுவாரா? சுரேஷ் ரெய்னா விளக்கம்

Suresh Raina : ஐபிஎல் 2025 தொடரில் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேரடியாக இழந்திருக்கும் நிலையில், சுரேஷ் ரெய்னா ஒரு மிக முக்கியமான செய்தியை தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் எம்எஸ் தோனி விளையாடுவாரா?, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு என்ன காரணம்?, சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். குறிப்பாக தோனி குறித்து அவர் தெரிவித்திருக்கும் கருத்து சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

சுரேஷ் ரெய்னா பேட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடுவது குறித்து பேசிய ரெய்னா, ஐபிஎல் ஏலத்திலேயே சிஎஸ்கே தோற்றுவிட்டதாக கூறியுள்ளார். நல்ல பிளேயர்களை வாங்குவதற்கு போதுமான பணம் இருந்தும் அந்த பிளேயர்களை வாங்க சிஎஸ்கே ஏன் ஆர்வம் காட்டவில்லை என கேள்வி எழுப்பியிருக்கும் அவர், அதுதான் எனக்கும் தெரியவில்லை என தெரிவித்துள்ளார். கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் அய்யர் போன்ற பிளேயர்கள் ஏலத்துக்கு வந்தும் அவர்களை ஏன் சிஎஸ்கே வாங்கவில்லை என கேட்டுள்ளார். இந்த ஐபிஎல் ஏலத்தை பொறுத்தவரை தோனியின் தலையீடு ஏதும் இல்லை, முழுக்க முழுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் எடுத்த முடிவு என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். அதேபோல் தோனி அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடுவார் என்றும் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் தவறுகள்

சுரேஷ் ரெய்னா பேசும்போது, ” தோனியைப் பொறுத்தவரை 43 வயதிலும் அணிக்கு தேவையானதை களத்தில் இருந்து செய்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேப்டன்சி, விக்கெட் கீப்பிங், பேட்டிங் என தன்னால் முடிந்த அத்தனை உழைப்பையும் கொடுக்கிறார். ஆனால் அணியில் இருக்கும் மற்ற பிளேயர்கள் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை ஐபிஎல் ஏலத்திலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றுவிட்டது. மற்ற அணிகள் எல்லாம் நல்ல பிளேயர்களை வாங்க போட்டி போடும்போது, கையில் பணம் இருந்தும் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ், ரிஷப் போன்ற பிளேயர்களை வாங்க சிஎஸ்கே ஆர்வம் காட்டாமல் இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த ஐபிஎல் ஏலத்தில் தோனியின் ஆலோசனைகள் எதுவும் இல்லை. முழுக்க முழுக்க அணி நிர்வாகம் எடுத்த முடிவுகள் தான்.

சிஎஸ்கேவின் மோசமான ஐபிஎல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவ்வளவு மோசமாக விளையாடி நான் பார்த்தது இல்லை. இளம் பிளேயர்கள் மற்றும் வாய்ப்பு கிடைத்தவர்கள் சிறப்பாக விளையாட வேண்டும், என்னைப் பொறுத்தவரை தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடுவார். சிஎஸ்கே நிச்சயம் கம்பேக் கொடுக்கும்” என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.