பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கு – அரசு உத்தரவின் பேரில் தேசிய புலனாய்வு முகமை விசாரணை

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் படி, பயங்கரவாதிகளால் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட பஹல்காம் தாக்குதல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) எடுத்துக்கொள்கிறது.

இதுகுறித்து என்ஐஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் படி, கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்.22) சுற்றுலாப்பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் வழக்கை தேசிய புலனாய்வு முகமை முறையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் நடைமுறையைத் தொடங்கியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்ள்ளது. ஏற்கனவே பஹல்காமில் இருந்து 5 கி.மீ. தள்ளியிருக்கும் பைரசன் புல்வெளியில் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ குழுவினர் புதன்கிழமை முதல் முகாமிட்டு தாக்குதலுக்கான ஆதாரங்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தேசிய புலனாய்வு முகமையின் ஐஜி, டிஐஜி மற்றும் எஸ்பி மேற்பார்வையிலான குழு அமைதியான மற்றும் அழகிய பைசரன் புல்வெளியில் கண்கள் முன்னே தங்களின் அன்புக்குரியவர்களை இழந்த பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருக்கின்றன. காஷ்மீரில் நடந்த கொடூரமான தாக்குதல் சம்பவங்களை ஒரு வரிசையில் ஒருங்கிணைக்க தாக்குதலை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன.

பயங்கரவாதிகள் பற்றிய தகவல்களுக்காக உள்நுழையும், வெளியேறும் நுழைவாயில்களை என்ஐஏ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்தக்க கொடூர பயங்கராவத தாக்குதலுக்கு காரணமான சதியினை வெளிக்கொண்டுவருவதற்காக தடயவியல் மற்றும் பிற துறை நிபுணர்களின் உதவியுடன் என்ஐஏ குழு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.