மழையால் ரத்தான கேகேஆர் – பஞ்சாப் போட்டி! சென்னை அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் 2025 சிறப்பானதாக அமையவில்லை. இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று 7 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளனர். அவர்களின் கடைசி வாய்ப்பாக இருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியை அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளனர். சென்னை சேப்பாக்கம் மைதானம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கோட்டையாக இருந்தது நிலையில், இந்த ஆண்டு மற்ற அணிகள் எளிதாக வெற்றி பெற்று சென்று உள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேபிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போன்ற அணிகள் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் தங்களது வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

தற்போது நான்கு புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்து பிளே ஆப் செல்ல ஒரு சில வாய்ப்புகள் இன்னும் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த ஆண்டு இன்னும் 5 போட்டிகள் மீதமுள்ள நிலையில் இந்த ஐந்திலும் வெற்றி பெற்றால் பிளே ஆப்க்கு தகுதி பெறலாம். இதுவரை ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து இரண்டு முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப்க்கு தகுதி பெறாமல் இருந்ததில்லை. கடந்த ஆண்டு இதே நிலையில் இருந்து ஆர்சிபி அணி பிளே ஆப்க்கு தகுதி பெற்று சென்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் இதேபோல பிளேஆப்பிற்கு செல்ல இன்னும் கடைசியாக ஒரு வாய்ப்பு உள்ளது. தற்போது நான்கு புள்ளிகளை பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதமுள்ள ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெறும் பட்சத்தில் 14 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்கலாம். இருப்பினும் நெட் ரன் ரெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. தற்போது -1.302 ஆக இருக்கும் நெட் ரன் ரேட்டை அதிகப்படுத்த வேண்டும். சென்னை அணி அடுத்த ஐந்து போட்டிகளில் ஐந்து வெவ்வேறு மைதானங்களில் வெவ்வேறு அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளனர். இதனால் தங்களுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் சரியாக பயன்படுத்திக் கொள்ளுமா என்று ரசிகர்களும் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

சென்னை அணியின் அடுத்த 5 போட்டிகள்

ஏப்ரல் 30: சென்னை vs பஞ்சாப், சென்னை
மே 3: ஆர்சிபி vs சென்னை, பெங்களூரு
மே 7: கொல்கத்தா vs சென்னை, கொல்கத்தா
மே 12: சென்னை vs ராஜஸ்தான், சென்னை
மே 18: குஜராத் vs சென்னை, அகமதாபாத்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.