நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 28) தொடரின் 47வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைடன்ஸ் அணியும் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
இரவு 7 மணிக்கு டாஸ் வீசப்பட்ட நிலையில், அதனை வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி குஜ்ராத் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் களம் இறங்கினர். இருவரும் தொடக்க முதலே சிறப்பாக ஆடி அணிக்கு ரன்களை சேர்த்தனர். கில் அரைசதம் அடித்தா. சாய் சுதர்சன் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து களம் வந்த ஜோஸ் பட்லரும் சிறப்பாக ஆடினார்.
ஒரு கட்டத்தில் சுப்மன் கில் 84 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பட்லர் அரைசதம் அடித்தார். அணியும் 209 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக தீக்சனா 2 விக்கெட்களை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கியது.
தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்சி களம் இறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடினர். ஜெய்ஸ்வால் ஒரு கேட்ச் வாய்ப்பை கொடுத்தும் அதனை பட்லர் தவறவிட்டார். இதனால் முதல் விக்கெட்டை வீழ்த்த 166 ரன்கள் தேவைப்பட்டது. வைபவ் சூர்யவன்சி 17 பந்துகளில் அரைசதம் அடித்து 35 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் ஐபிஎல்லில் அதிவேகமாக சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த பட்டியலின் முதல் இடத்தில் கிறிஸ் கெயில் உள்ளார்.
இதையடுத்து 101 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களம் வந்த நிதீஷ் ராணா 4 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த தொடரில் ராஜஸ்தான் அணி தனது 3வது வெற்றியை பெற்றுள்ளது.
மேலும் படிங்க: CSK: 2026இல் தோனி விளையாடுவார்… அவர் தான் கேப்டன் – காரணம் இதுதான்!
மேலும் படிங்க: நடராஜன் ஏன் டீமில் இல்லை? கெவின் பீட்ர்சனின் பதிலால் கிளம்பிய சர்ச்சை!