முன்பாக பஜாஜ் ஆட்டோவின் சேட்டக் எலகட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் 35 சீரிஸ் வரிசையில் வெளியிடப்பட்ட 3503 மாடலின் விலை ரூ.1,10,210 ஆக எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த 3503 மாடல் மூலமாக புதிய 3.5Kwh பேட்டரி பெற்ற சேத்தக் 35 சீரிஸ் வரிசையின் குறைந்த விலை மாடலாக அமைந்துள்ளது.
குறிப்பாக 3501, 3502 போன்ற மாடல்களை விட வேகம் 10 கிமீ வரை குறைவாக அமைந்துள்ளதால், மணிக்கு 63 கிமீ வேகத்தை எட்டுவதுடன் முழுமையான சிங்கிள் சார்ஜில் 155 கிமீ வழங்கும் என இந்நிறுவனத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற இரு வேரியண்டுகளை விட பல்வேறு வசதிகள் நீக்கப்பட்ட இந்த வேரியண்டில் எளிமையான எல்சிடி கலர் கிளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது.
கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் கிரே என நான்கு நிறங்களை மட்டும் பெற்றுள்ள சேட்டக் 3503 மாடலில் 0-80 % சார்ஜிங் பெற 3 மணி நேரம் 25 நிமிடங்கள் தேவைப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரு பக்க டயரிலும் டிரம் பிரேக் பெற்று ரிவர்ஸ் மோடு பெற்று ஈக்கோ, ஸ்போர்ட்ஸ் என இரு ரைடிங் மோடுகளையும் பெற்றுள்ளது. இந்த மாடலுக்கு சவாலாக டிவிஎஸ் ஐக்யூப், ஏதெர் ரிஸ்டா, ஹோண்டா ஆக்டிவா இ, விடா வி2 போன்றவை உள்ளது.