Split ACs under 40,000: இந்த கடுமையான வெயிலில் நீங்களும் உங்களின் வீட்டில் ஏசி வாங்க திட்டமிட்டிருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. உங்கள் பட்ஜெட் ரூ.40,000மாக இருந்தால், உங்களுக்காக ஏசிகளின் பட்டியலை இங்கே நாங்கள் கொண்டு வந்துள்ளோம். இ-காமர்ஸ் தளமான Amazon மற்றும் Flipkart தளத்தில் ACகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பட்டியலில் உள்ள அனைத்து ஏசிகளும் 2 டன் எடை கொண்டவை, இதில் சிறந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வங்கப்பட்டுள்ளது. வங்கிச் சலுகைகளைப் பயன்படுத்தி இவை அனைத்தையும் குறைந்த விலையில் வாங்கலாம். பட்டியலைப் பார்ப்போம்.
Whirlpool 2.0 Ton 3 Star:
வேர்ல்பூலின் (Whirlpool ) இந்த 2 டன் ஏசியும் அற்புதமான ஏசி ஆகும். இது 100% காப்பர் கண்டன்சர் காயிலை (Copper Condenser Coil) கொண்டுள்ளது. கம்ப்ரசருக்கு 1 வருட தயாரிப்பு உத்தரவாதமும், 5 வருட நீட்டிக்கப்பட்ட உத்தரவாதமும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஏசியின் அம்சங்களைப் பற்றிப் பேசுகையில், இது 6வது சென்ஸ் தொழில்நுட்பம், டஸ்ட் பில்டர், நிலைப்படுத்தி இல்லாத செயல்பாட்டைக் (6th Sense Technology, Dust Filter, Stabilizer Free Operation) கொண்டுள்ளது. இதன் விலை ரூ.41,990 ஆகும். HDFC வங்கி கிரெடிட் கார்டு மூலம் இதில் ரூ.1,892 கூடுதல் தள்ளுபடியை பெறலாம்.
Cruise 2 Ton 3 Star Inverter Split AC:
இந்த 3 நட்சத்திர மதிப்பீடு பெற்ற இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசியின் (Inverter Split AC) விலை ரூ.39,990 ஆகும். இது 100% காப்பர், கன்வர்டிபல் 4-இன்-1 PM 2.5 வடிகட்டியைக் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.39,990 ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளில் ரூ.3,000 கூடுதல் தள்ளுபடியை இந்த ஏசியில் பெறலாம். சிறப்பு அம்சங்களைப் பற்றி பேசுகையில், இது 4 ஃபேன் ஸ்பீடு மோடுகள், ஸ்மார்ட் டயக்னாஸிஸ் சிஸ்டம், மேஜிக் எல்இடி டிஸ்ப்ளே, பெரிய எல்சிடி ரிமோட் (Smart Diagnosis System, Magic LED Display, Large LCD Remote) மற்றும் பல சிறப்பு அம்சங்களுடன் வருகிறது.
Voltas 2 Ton, 3 Star, Inverter Split AC: வோல்டாஸின் இந்த ஸ்பிளிட் ஏசி 2 டன் மற்றும் இது 3 நட்சத்திர மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.43,490 ஆகும். தூAnti Dust, Antimicrobial Protection, Anti-corrosive Coating, LED Display, Self Diagnosis, Sleep Mode, Turbo, Remote Lock, Low Gas Diagnosis, Auto Restart, Anti Fungal போன்ற சிறப்பு அம்சங்கள் இதில் கிடைக்கின்றன. இதில் ரூ.1,958 கூடுதல் தள்ளுபடி பெறலாம்.
Godrej 2 Ton 3 Star: இது 5 இன் 1 கன்வெர்ட்டிபிள் ஸ்பிளிட் ஏசி ஆகும், இது Inverter Variable ஸ்பீடு கம்ப்ரசருடன் வருகிறது. இதன் கொள்ளளவு 2 டன், இது 3 நட்சத்திர மதிப்பீட்டைக் கொண்டுள்ளது மற்றும் குளிரூட்டும் சக்தி 6.1 கிலோவாட் ஆகும். இது 5 வருட இலவச விரிவான, பொருந்தக்கூடிய உற்பத்தி உத்தரவாதத்துடன் வருகிறது. இதன் விலை ரூ.42,990.