அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டெல்லி கேப்பிடல்ஸ் மட்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடைபெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது தற்போது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இரண்டாவது இன்னிங்சின் போது விராட் கோலி பேட்டிங் செய்ய, கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்தார். அப்போது விராட் கோலி நேராக கேஎல் ராகுலிடம் சென்று ஏதோ பேசுகிறார். அதற்கு கேஎல் ராகுல் விளக்கம் அளிக்கிறார், ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளாத படி மீண்டும் பேட்டிங் செய்ய வருகிறார் விராட் கோலி.
மேலும் படிங்க: ஐபிஎல்லில் டக் அவுட்டே ஆகாமல் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியல்!
இருவரும் என்ன பேசினார்கள்?
இது தொடர்பாக கமெண்டரியில் உள்ளவர்கள் கூறுகையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி பீல்டர்களை மாற்றி அமைக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வதாக விராட் கோலி ராகுலிடம் கூறுகிறார், ஆனால் இதற்கு கே எல் ராகுல் விளக்கம் அளிக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே காரசார விவாதங்கள் நடைபெற்றதாக தெரிவித்துள்ளனர்.
Things are heating up in Delhi! #ViratKohli and #KLRahul exchange a few words in this nail-biting match between #DC and #RCB.
Watch the LIVE action https://t.co/2H6bmSltQD#IPLonJioStar #DCvRCB | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, Star Sports 2, Star… pic.twitter.com/Oy2SPOjApz
— Star Sports (@StarSportsIndia) April 27, 2025
ஆட்டத்தை மாற்றிய க்ருனால் பாண்டியா
விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு இடையில் க்ருனால் பாண்டியா தனது சிறப்பான பேட்டிங் மூலம் இந்த போட்டியில் ஆர்சிபி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார். கிட்டத்தட்ட 47 பந்துகளில் 73 ரன்கள் அடித்து முக்கியமான இந்த போட்டியில் வெற்றிக்கு உதவியுள்ளார். 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு க்ருனால் பாண்டியா அடிக்கும் முதல் அரை சதம் இதுதான். 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. 26 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். அப்போது விராட் கோலி மற்றும் க்ருனால் பாண்டியா இணைந்து மெதுவாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடி தந்தனர்.
இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 84 பந்துகளில் 119 ரன்கள் அடித்தது. ஒருபுறம் விராட் கோலி நிதானமாக ஆட மறுபுறம் க்ருனால் பாண்டியா தேவையான நேரத்தில் சிக்சர் மற்றும் போர்களை அடித்தார். மிகவும் கடினமான டெல்லி பிட்சில் ஸ்பின்னர்களை மெதுவாக ஆடி வேக பந்துவீச்சாளர்களை டார்கெட் செய்தனர். இதனால் ஆர்சிபி அணிக்கு இறுதியில் எளிதான ஒரு வெற்றி கிடைத்தது. இதற்கு முன்பு பெங்களூரில் நடைபெற்ற ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இதே போல கேஎல் ராகுல் நிதானமாக அடி டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். நேற்று நடைபெற்ற போட்டியில் க்ருனால் பாண்டியா மற்றும் விராட் கோலி அதே போல நிதானமாக விளையாடி ஆர்சிபி அணிக்கு வெற்றியை தேடி தந்து பலி தீர்த்துள்ளனர்.
மேலும் படிங்க: ஆல் அவுட்டான லக்னோ.. பாயிண்ட்ஸ் டேபிளில் டாப்புக்கு சென்ற மும்பை அணி!