அமெரிக்கா உடனான தங்கள் நாட்டின் உறவு முடிவுக்கு வந்துவிட்டதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கனடா தேர்தலில் நான்காவது முறையாக வெற்றிபெற்றுள்ள லிபரல் கட்சி சார்பில் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மார்க் கார்னி அமெரிக்காவின் துரோகத்தினால் நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். கனடா தற்போது வரலாற்றின் மிக முக்கியமான தருணத்தில் உள்ளது, அமெரிக்காவுடான எங்களின் பழைய உறவு முடிவிற்கு வந்துவிட்டது, அமெரிக்கா எங்கள் வளங்களை நாட்டை தனதாக்கிக்கொள்ள முயல்கின்றது, இது மிகவும் வேதனையான நிகழ்வு என்றும் […]
