உலகயளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பிஓய்டி நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான சீல் (Seal) எலக்ட்ரிக் செடானின் விலை ரூ.41 லட்சம் முதல் ரூ.53.15 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
லித்தியம் ஐயன் பாஸ்பேட் (LFP- Lithium Iron Phosphate) குறைந்த மின்னழுத்த பேட்டரி (LVB – low voltage battery) மிக சிறப்பான நண்மைகளுடன் மின்னழுத்த பேட்டரிகளுடன் ஒப்பிடும்போது ஆறு மடங்கு குறைவான எடை, ஐந்து மடங்கு சிறந்த செல்ஃப் டிஸ்சார்ஜ் மற்றும் 15 ஆண்டு ஆயுட்காலம் கொண்டதாக அமைந்துள்ளது.
கேபினுக்குள், கூடுதல் வசதிக்காக BYD SEAL இப்போது ஒரு பவர் சன்ஷேடுடன், புதிய சில்வர் பூசப்பட்ட கேபினின் சூழலை மேம்படுத்துகிறது, இது மிகவும் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் பிரீமியம் உணர்வை உருவாக்குகிறது. ஏர் கண்டிஷனிங் அமைப்பும் ஒரு பெரிய கம்ப்ரசர் திறன் மற்றும் காற்று சுத்திகரிப்புக்கான முற்றிலும் புதிய தொகுதியுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
- 61.44kWh பேட்டரி பேக் கொண்டு 204hp மற்றும் 310Nm டார்க் வழங்குகின்றது. இதன் ரேஞ்ச் 510 கிமீ (NEDC cycle) ஆகும்.
- RWD 82.56kWh பேட்டரி பேக்கில் 312hp மற்றும் 360Nm டார்க் வழங்குகின்றது. இதன் ரேஞ்ச் 650 கிமீ (NEDC cycle) ஆகும்.
- AWD பெற்ற 530hp மற்றும் 670Nm டார்க் உற்பத்தி செய்கின்றது 0-100kmph வேகத்தை எட்ட 3.8 வினாடிகளை ஆல் வீல் டிரைவ் மாடல் கொண்டு முழுமையான சிங்கிள் சார்ஜில் பயணிக்கும் வரம்பு 580 கிமீ ஆகும்.
Model | Battery Capacity | Price (₹) |
BYD SEAL Dynamic (RWD) | 61.44 kWh | ₹41,00,000 |
BYD SEAL Premium (RWD) | 82.56 kWh | ₹45,70,000 |
BYD SEAL Performance (AWD) | 82.56 kWh | ₹53,15,000 |