Kuiper இன்டர்நெட் சாட்டிலைட்டை விண்ணில் செலுத்திய அமேசான்: மஸ்க் உடன் மோதும் பெசோஸ்

புளோரிடா: சாட்டிலைட் மூலம் அதிவேக இணைய சேவை வழங்கும் நோக்கில் Kuiper இன்டர்நெட் சாட்டிலைட்டை விண்ணில் செலுத்தி உள்ளது அமேசான் நிறுவனம். இதன் மூலம் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் சாட்டிலைட் இணைய சேவைக்கு சவால் விடுத்துள்ளது ஜெஃப் பெசோஸின் அமேசான் நிறுவனம்.

உலக அளவில் இதன் மூலம் வேகமான மற்றும் மலிவு விலையில் பிராட்பேண்ட் இணைய சேவையை வழங்க அமேசான் திட்டமிட்டுள்ளது. அதற்கான தொடக்க புள்ளியாக 27 Kuiper இன்டர்நெட் சாட்டிலைட்டை ‘அட்லாஸ்’ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தி உள்ளது அமேசான். வரும் நாட்களில் Kuiper இன்டர்நெட் சாட்டிலைட்டை அதிகளவில் விண்ணில் நிலை நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புளோரிடாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட Kuiper இன்டர்நெட் சாட்டிலைட்கள் பூமியில் இருந்து சுமார் 400 மைல் தொலைவில் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2023-ல் சோதனை ஓட்டமாக இரண்டு Kuiper சாட்டிலைட்டை விண்ணில் நிலை நிறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

பயனர்களின் தேவைக்கு ஏற்ப 100 Mbps, 400 Mbps மற்றும் 1 Gbps என இணைய சேவையை வழங்க உள்ளது அமேசான். இதற்கான சாந்த விவரம், கட்டணம் போன்றவற்றை அந்நிறுவனம் இன்னும் பகிராமல் உள்ளது.

3,236 Kuiper சாட்டிலைட்: சுமார் 10 பில்லியன் டாலர் பொருட்செலவில் இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது அமேசான். மொத்தம் 3,236 Kuiper சாட்டிலைட்களை விண்ணில் நிலை நிறுத்த உள்ளது. அமெரிக்காவின் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் ஆணையத்தின் விதிகளின் படி வரும் 2026-ம் ஆண்டு ஜூலைக்குள் 1,618 Kuiper சாட்டிலைட்களை அமேசான் நிலை நிறுத்த வேண்டும் என தகவல்.

இப்போது உலக அளவில் சாட்டிலைட் இணைய சேவையை எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் வழங்கி வருகிறது. தற்போது Kuiper வரவு மூலம் ஸ்டார்லிங்குக்கு அமேசான் சவால் கொடுத்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.